மகாகவி பாரதியாரின் நினைவு தினம் டிசம்பர் 11. நான் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லும் நூல்களில் நிச்சயம் ‘பாரதியாரின் கவிதைகள்’ அடங்கிய நூலுமிருக்கும். பாரதியின் அறிவுத் தேடல் மிக்க நெஞ்சு, சமுதாயப் பிரக்ஞை மிக்க நோக்கு எல்லாமே என்னை அவன் ஆகர்சிக்க முக்கிய காரணங்கள். மானுட இருப்பின் சகல கோணங்களைைப்பற்றியும் அவனது சிந்தித்தான். கனவுகள் கண்டான். அவற்றை அவன் எழுத்தில் வடித்தான். அனுபவமும், அறிவுத்தேடலும் அவன் எழுத்துகளெங்கும் நிறைந்திருந்தன. மானுடனொருவருக்குத் தேவையான அனைத்துமே அவனது எழுத்துகளில் நிறைந்திருந்தன. இதனாலேயே அவனது கவிதைகள் அடங்கிய தொகுதியானது வெறும் கவிதை நூலாக மட்டுமின்றி, வாழ்க்கைக்கு வழிகாட்டுமொரு வழிகாட்டியாக, அறிவினைப்போதிக்கும் அறிவு நிலையமாக, நண்பராக, காதலராக, இயற்கையை உபாசிப்பவருக்கு இன்பமளிக்கும் இயற்கை வளங்களாக.. இவ்விதம் பல்வேறு வழிகளில் விளங்கியது. எனக்கு மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் அவனது கவிதைகளின் சில வரிகளை வாசிப்பேன். மறுகணமே சோர்வு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.
எனக்கு முதன் முதலாகப் பாரதியுடனான அறிமுகமும், தொடர்பும் என்னுடைய ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பமாகியிருந்ததாக நினைவு. பாரதியாரின் கவிதைகள், ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (இராமாயணம்) , ‘வியாசர் விருந்து’ (மகாபாரதம்) மற்றும் புலியூர்த் தேசிகனின் ‘சிலப்பதிகாரம்’ , ‘நற்றிணை’ ஆகிய நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒருநாள் கூட அப்பா அவற்றை வாசித்துப் பார் என்று கூறியதில்லை. அவ்விதம் வாங்கிப்போட்டிருந்த நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தொடங்கியபோது எனக்கு அறிமுகமாகி, என்னுள்ளத்தில் வந்து குடியேறியவரே மகாகவி பாரதியா. அன்று வந்து குடியேறியவர் இன்று வரை மட்டுமல்ல நான் இருக்கும்வரை இங்குதான் தங்கியிருக்கப்போகின்றார்.
இவ்விதம் என் அபிமானக் கவி பாரதியின் எனக்குப் பிடித்த கவிதை வரிகள் சிலவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நான் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!
1.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
Continue Reading →
“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும் ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.
ஒரு சிறந்த கவிதையானது வாழ்வில் இன்பமும் துன்பமும் சேர்ந்த அனுபவங்களை மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படுகின்ற விலகல்களின் இடைவெளிகளையும் சொல்லநினைப்பது.
இளங்கவி சிவசேகரன், மக்கள் போரும் வாழ்வும் அலைக்கழிப்புமாக வாழ்ந்த காலங்களைத் தரிசித்திருக்கிறான். எப்போது இந்த வாழ்வு முழுமை பெறும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து வரும் மாந்தர்கள் போலவே அவனின் கிராம மாந்தர்களும் எப்போதும் நிரப்படாத வாழ்க்கை இடைவெளிகளுடனேயே கடந்து கொண்டிருக்கிறாhர்கள். அவ்வாறான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வரும் கவிஞனிடமும் சொல்வதற்கு ஏராளம் வார்த்தைகள் உள்ளன.
இத்தொகுப்பிலும் தான் வாழ்ந்த கிராம, குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப் பார்க்கின்ற அதேவேளை; காலம் மனிதர்களிடம் ஏற்படுத்திய வடுக்களையும் இன்னமும் தீர்க்;கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக்குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்;.
“இனிமேல் ஒன்றுமில்லை என்றெண்ணி
கண்ணீர் விடும் தருணங்களில்
ஏதோ ஒரு ரூபத்தில்
மனவயலுக்குள் முளைதள்ள
எத்தணித்துத் தோற்றுப்போகின்றன
வெட்கம் கெட்ட ஆசை விதைகள்”
(பசுமை தொலைத்த மரம்)
“ஆண்டுகள் பலவாய்
நிமிர்ந்து நிற்கத் தெம்பின்றி
கூனாகிப் போன முதுகு
கொஞ்சம் நிமிரப் பார்க்கும்”
(எழுநூற்றிமுப்பது ரூபாய் மட்டும்)
Continue Reading →
காலம் மிகவும் வலியது.
முகநூற் பதிவொன்றுக்கு நண்பனொருவன்
இட்ட எதிர்வினையிது.
உண்மைதான் நண்பா!
காலம் மிகவும் வலியதுதான்.
நிலையற்ற காலம் கூடச்
சார்பானதுதான். இருந்தும்
காலம் மிகவும் வலியதுதான்.
இருப்பில் இருக்குமனைத்தையுமே
இங்கு
நினைவுகளாக்கி நனவிடை தோய
வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
உண்மைதான் நண்பா!
மின்காந்த அலைகளுக்குள் அனைத்தையும்
அடக்கிவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
Continue Reading →
“கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்” என்ற…
Continue Reading →
அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர். கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.
திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.
முதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.
Continue Reading →
வெளுத்துப் பெய்யும் மழையின் குரல்
இருட்டில் என் கனவை விழுங்கிற்று
அகலும் அறிகுறியில்லை
போன பொழுதில் பெய்தபோது
அம்மா அலுப்பின்றி கிடந்தாள்
அருவமாகிப் போன அவளை
பெருமழைதான் தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த காலம்
வலியைத் துடைக்கத் தவறியது
சலசலத்துப் பொங்கிச் சீரும் நீர்
வாசலில் பூதம் போல் பெருகியது
என் கண்ணீரையும் வறுமையையும் போக்கி
என் அரவணைப்புக்குள் இருந்த உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள் இறுதி உயிர்மூச்சு
மெல்லிய அவள் குரல்
தேக்கு மரக்கதவோரம் பனித்துளிபோல்
அடங்கி முடங்கிற்று
Continue Reading →
1.
லேசான பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்தும் மகிழ்வினூடே
சிரித்துத் திரிந்த
அந்த நொடிகள்
நெருப்பினூடே இரும்பை இலக்குவது போல உருகிச் சிதைந்தது.
பதிலியை ஏற்காத
வினை தவிக்கிறது.
வலி தாங்க இயலாமல்
வெள்ளம் பெருக்கெடுக்க
கண்கள் குளமாக…
ரணத்தின் உச்சத்தில்
மனம் தற்கொலை செய்ய…
பிரிவின் இறுதியில்…
உயிர் மீட்டுகிறது ஆதிக்காதலின் நினைவுகளை!!”
நிறைவுற்றது காதற்கிளவி!!!
Continue Reading →
1. மீண்டும் நான்..
வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..
என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது
Continue Reading →
1. வசந்தமாய் மாறும் !
ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !
மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !
தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !
குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !
விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !
Continue Reading →