கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே  !

சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !

Continue Reading →

ஆய்வு: நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் – ஜமாப் ஒப்பீடு!

இரா.மூர்த்திமனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன்,  ஆண்மான், ஒளி, சாத்திரம்,  மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை,  உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை,  சிற்பம்,  ஓவியம்,  கட்டிடம், நாட்டியம்,  கூத்து,  ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து,  ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.  இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.

“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து,  மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ,  நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும்,  ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும்  நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு,  திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு,  இசைக்கும்முறை,  அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும்,  சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில்  முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 280: பார்த்திபனின் கதை சிறுகதைத்தொகுதி பற்றி…

பார்த்திபன் கதைகள்: 'கதை' முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு ‘கதை’! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கதை’ என்னும் பெயரில் தொகுப்பொன்றினை அவரது நண்பர்கள் ‘தமிழச்சு’ (சுவிஸ்) பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். இதற்காக அந்நண்பர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

பார்த்திபனின் எழுத்துகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை ஆவணப்படுத்தியுள்ள முக்கியமான தொகுப்பு இது. நூலின் இறுதியில் எழுத்தாளர்கள் பலரின் பார்த்திபனின் எழுத்துகள் பற்றிய கருத்துகளையும் இணைத்துள்ளார்கள். அட்டைப்படத்தைச் சிறப்புற வரைந்த மணிவண்ணன் என்னும் ஓவியரே நூலிலுள்ள சிறுகதைகளுக்கும் நவீனத்துவம் வெளிப்படும் ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவையும் நூலுக்கு மேலும் சிறப்பூட்டுகின்றன.


அத்துடன் இத்தொகுதியினை என்னிடமும் கனடாவுக்கு அனுப்பிச் சேர்த்துள்ளார்கள். முகம் தெரியாத அந்நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் பார்த்திபன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது எழுத்துகள், சிந்தனைகள் எனக்குப் பிடித்தவை. அவ்வகையில் இத்தொகுப்பினை எனக்கு அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி. இவர்களைப்போன்றவர்களால்தாம் பல அரிய படைப்புகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்காகவும் ஒரு பாராட்டு. நூலில் கூடத் தாம் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தாத இவர்களது பண்பு நெஞ்சைத்தொடுகின்றது. இத்தொகுதியினைப் பற்றிய எனது கருத்துகளை விரைவில் பதிவு செய்வேன்.


பார்த்திபனின் சிறுகதைத் தொகுதியான ‘கதை’யின் முதல் ஐந்து சிறுகதைகளை வாசித்து விட்டேன். அவை பற்றிய கருத்துகளிவை. இவற்றைத்தாம்  எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ‘புள் ஷிட்’ குப்பைகள் என்று தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் சுமதி ரூபன் முதல் மூன்று கதைகளுக்கு மேல் தன்னால் வாசிக்க முடியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். அவ்வப்போது வாசித்து முடிந்ததும் அவை பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன்.

தொகுப்பிலுள்ள  முதல் ஐந்து கதைகளின் தலைப்புகள் வருமாறு: ‘ஒரே ஒரு ஊரிலே..’, (1986), ‘பாதியில் முடிந்த கதை’ (1987), ‘காதல்’ (1988), ‘பசி’ (1988) & ‘மனைவி இறக்குமதி’ (1988).

மானுட வாழ்வானது அதன் முடிவு தெரியாத நிலையில் இறுஹி வரையில் ஆசாபாசங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முகநூலில் முடிவு வரைப் பல்வேறு விடயங்களைப்பற்றிப் பதிவுகளிட்ட பலரின் முடிவுகளை அடுத்த நாள் அறிந்திருக்கின்றோம். கனவுகளுடன், கற்பனைகளுடன், வருங்காலத்திட்டங்களுடன் , பல்வகையான உணர்வுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மானுட இருப்பானது பல சமயங்களில் எதிர்பாராத விபத்துகளில், இயற்கை, செயற்கை நிகழ்வுகளின் கோரப்பிடிக்குள் சிக்கி, வாழும் மண்ணில் நிலவும் சமூக, அரசியற் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக முற்றுப்பெறுவதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் மூலமறிந்திருக்கின்றோம். பார்த்திபனின் ‘கதை’ தொகுதியிலுள்ள  கதைகளான ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘பாதியில் முடிந்த கதை’ மற்றும் ‘பசி’ இதனை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்முன்னுரை

மொழி என்பது பேசுவதற்கானது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்காக அல்லது புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாரம்சம். ஒருமொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அதுவொரு தனிமனித வாழ்க்கையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ளமுடியும். அப்படி விவரிக்கின்ற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். அவ்விலக்கியப் படைப்பின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழியாகும்.

தமிழ்மொழி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருக்கின்றது, பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன.

தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் அல்லது சமூகம் அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார வழக்குகள் ஆகும். பெரும்பாலான தமிழ்மொழி வட்டார வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றாலும், சில சொற்கள் பெரிதும் மாறுபடுகின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் சில சொற்களின் ஒலிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. சான்றாக, இங்கே என்ற சொல் தஞ்சாவுரில் “இங்க” என்றும், திருநெல்வேலியில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரத்தில் “இங்குட்டு” என்றும், கன்னியாகுமரியில் “இஞ்ஞ” என்றும், யாழ்ப்பாணத்தில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றன.

வட்டார நாவலின் தனித்தன்மை

நாவல் வகைகளில் வட்டார நாவல்கள் ஒரு தனித்தன்மையுடன் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளதைப் போலவே மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருண்மை பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் என்பர். அங்குள்ள படைப்பாளிகளாலோ அல்லது அப்பொருண்மை புரிந்த வாசகர்களாலோ அவ்வட்டார மொழியில் படைக்கப்படும் நாவல்களே வட்டார நாவல்கள் ஆகும்.

வட்டார நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி, கதையைக் கூறுவதாகும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்குகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும், அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் யதார்த்தமாக வெளிப்படுத்துவதே வட்டார இலக்கியத்தின் நோக்கமாகும். இதனை,

“இலக்கியத்தை மண்மணத்துடனும், வேரோடும் காட்டும் முயற்சியே இது. இதுவொரு நுணுக்கமான அருங்கலை“

என்பார் இரா. தண்டாயுதம் (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப.2). ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தன்மைகளைக் கலைஇலக்கிய வடிவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதினால் வட்டார இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

தமிழில் வட்டார நாவல்கள்

தமிழில் 1942ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவலே தமிழின் முதல் வட்டார நாவலாகும். கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி, கிராமியச் சூழலை மையப்படுத்தி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சு. வே. குருசர்மாவின் “பிரேம கலாவத்யம்” (1893), கே.எஸ். வேங்கடரமணியின் “முருகன் ஓர் உழவன்” (1927) ஆகிய நாவல்கள் கிராமங்களை மையப்படுத்தி எழுந்தபோதிலும், முழுக்க முழுக்கக் கிராமியச் சூழலைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனையை வீசும் ஒரு முன்மாதிரியான நாவலாக இருப்பது “நாகம்மாள்” நாவலேயாகும்.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 279: பால்ய காலத்து அழியாத கோலங்கள் – ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’

ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் ‘பொன்மலர்’. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் ‘பார்வதி பி.ஏ’ இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’.
ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’.
மாயாவியின் ‘வாடாமலர்’
ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’
சாண்டில்யனின் ‘ஜீவபூமி’
சாண்டில்யனின் ‘உதயபானு’ & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் ‘உயிரோவியம்’
அகிலனின் ‘சிநேகிதி’
பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார் கதைகள்’
விந்தனின் ‘பாலும் பாவையும்’
கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’
அறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’
மு.வ.வின் ‘அந்த நாள்’
சி.ஏ.பாலனின் ‘தூக்குமர நிழலில்’
குரும்பூர் குப்புசாமியின் ‘பார் பார் பட்டணம் பார்’
மாயாவியின் ‘வாடாமலர்’
லக்சுமியின் ‘காஞ்சனையின் கனவு’ & ‘பெண்மனம்’

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’யும், சாண்டில்யனின் ‘ஜீவபூமி’யும் விளங்கின.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை ஃபூக்கோதொல்காப்பியத்தின்படி தலைவன் – தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

ஃபூக்கோவிய அதிகாரச் சிந்தனை
ஃபூக்கோவிய அதிகாரம் (Power) என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஒருவர்/ஒன்று மற்றொருவர்/மற்றொன்று மீது செலுத்துகிற ஆதிக்கம் சார்ந்த ஆற்றல் அல்ல. சமூகம் உறவுகளால் ஆனது. அந்த உறவுகள் ஒவ்வொரு கணப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கம் ஒன்று மற்றொன்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தை நிகழ்த்துகிற ஆற்றலை ஃபூக்கோவியல் அதிகாரம் என்ற சொல்லால் குறிக்கிறது. ஃபூக்கோவிய “அதிகாரம் ஒரு நிறுவனம் அல்ல, மற்றும் ஒரு அமைப்பும் அல்ல…. அது ஒரு பெயர்” (Foucault,1998:93). அதிகாரம் தன்னிச்சையான இயக்கம் கொண்ட ஒரு பொருள் அல்ல. உறவுகளுக்குள் இருந்துகொண்டு அதனை இயக்கிக்கொண்டு இருக்கிற ஒன்று. உறவுகள் இல்லாமல் ஆகிறபோது அதிகாரமும் இல்லாமல் ஆகிவிடும்

ஆற்றலால் அமைந்த உறவுகள் அதிகார உறவுகளாகும் (Power relations). அதிகாரம் உறவுகொள்ளும்போதுதான் மாற்றம் நிகழ்கிறது. இங்கு ஒரு கேள்வி எழும். அது மாறுகிற செயல் ஆற்றலற்றதா? என்பதாகும். மாறுகிற செயல் ஆற்றலற்றது இல்லை. மாறாகக் குறைவான ஆற்றல் கொண்டது. அதாவது பயிற்சி பெறுகிற இடத்தில் இருப்பது. அதேசமயம் பயிற்சி பெறுகிற அதிகாரம் இல்லாமல் மாற்றியமைக்கிற அதிகாரம் இல்லை. “அதிகாரம் இங்கோ அங்கோ இடமாக்கப்பட்டது இல்லை” (Foucault,1980:98) என்பது சுட்டத்தக்கது. “அதிகார உறவுகள் உள்நோக்கம் மற்றும் தன்னிலையின்மையும் ஒருசேரப் பெற்றவை” (Foucault,1998,94). உள்நோக்கம் இருக்கிற இடத்தில் தன்னிலை தவிர்க்கமுடியாதது. ஆனால் ஃபூக்கோ அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். ஃபூக்கோ இதனை விளக்க வெவ்வேறு பொருண்மையிலான இரு சொற்களைக் கையாள்கிறார். ஒன்று உத்தி (Tactic) மற்றொன்று சூழ்ச்சி (Strategy).

Continue Reading →

ஆய்வு: வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு கல்வெட்டு

வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளை தேய்த்துக்கரைத்து அழித்தட்டுவிட்டனர்.  ரத்தினசபை வாயிலை தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த ரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)

அறிவித்தல்நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது.

விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /-
(பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப்போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவிலாவது பரிசு பெரும் திரைக்கலைஞர், நான்காவது ஆண்டும் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவில் விருது பெற்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இடையில் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டாலும் பரிசுத்தொகை கிடைக்காது. தொடர்ந்து குறும்படத்துறையில் இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இத்தகைய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். மிக முக்கியமாக விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும் பத்து குறும்படங்களும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 க்கு நேரடியாக தகுதி பெரும். சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெறுவதற்கு முன்னரும் குறும்படங்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளிவரும். ஆனால் அப்போது பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று திரையிட தெரிவான பத்து குறும்படங்களை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த குறும்படங்கள் நேரடியாக IFFC யில் பரிசுக்குரிய பிரிவில் திரையிடப்படும்.

Continue Reading →

இலண்டன்: தாமரைச்செல்வியின் ‘வன்னியாச்சி’ கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு!

இலண்டன்: தாமரைச்செல்வியின் 'வன்னியாச்சி' கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

Continue Reading →