வாசிப்பும் யோசிப்பும் 307: நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!

மனக்கண் அத்தியாயம் முப்பது.காத்யானா அமரசிங்க அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது ‘தணியாத தாக’த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் ‘களனி வெள்ளம்’ என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் ‘மனக்கண்’ நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை ‘லீகல் சைஸ்’ அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

Continue Reading →

நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )

- சுப்ரபாரதிமணியன் -நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )

* மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர்,  கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி )
* சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி
28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல்,  என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்

கவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,.
– தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்


” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”

”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய  காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.

Continue Reading →

இரு-மொழி இரணைக் கவிதைகள்- 5: ஆண்மை MANHOOD, MANLINESS, MALENESS

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -ஆண்மையின் ஆதி ஆண்கள் பெண்களை
வளைக்க நடிக்கும் இயல்பு. (001) 

The origins of manhood lie in men’s
Actions to attract, court and love women.

அடக்குமுறை ஆண்மைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கென்றும் காண்க. (002)

It’s a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மைக்குப் பெண்மையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடை அன்பெனும் பண்;பு. (003)

The arrow that makes women fall for men
Is men’s dignified love for their women. 

ஆண்மையும் பெண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வேண்டி வந்த இடத்து. (004) 

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man. 

ஆண்மைக்கு அழகு, வீடொன்றை அமைத்து
பெண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

Continue Reading →

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

முன்னுரை
சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும். எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

“நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்- கற்றறிந்தார் 
ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற 
இத்திறந்த எட்டுத்தொகை” என்பதோர் நுற்பா. 

அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை. இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலதரும். அதனையே இக்கட்டுரை மேற்கொள்கிறது. 
சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம். சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை பற்றியும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. 

பெயரீடுகள்
சங்க இலக்கியங்களில் முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி. இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைகின்றன. முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

Continue Reading →