நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (2)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]

ஆசிரியரின் என்னுரை!

இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின்  முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது.  நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.

இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.  மகிந்த ராஜபக்சா அரசாங்க  காலத்தில்   அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது.   ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.   .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 %  …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.

சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் ‘பதிவுகள்’இணைய இதழில் வெளியாகின்றது.


அத்தியாயம் இரண்டு!

வாலையம்மன் கோவில் வாசிகசாலை அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சார்பில் வாசிகசாலைக் கமிட்டி இயக்கக் ‘காம்பு’க்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள்.  ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு …இருக்குமோ? தெரியாது .அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாகிவிடும். எனவே கட்டாயமும் இருந்தது.

அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. வடிவேலின் இயக்கம் வானில் வந்திறங்கியது. கமிட்டி ஆட்களை, தலைவர் பரமேஸ், உபதலைவர் பிரகாசம், காரியதரிசி சரவணன், உபகாரியதரிசி பாலன், பொருளாளர் குமார், கமிட்டி உறுப்பினர் சுமன், மனோகரன் அகிலன் என்று எட்டுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போனார்கள். கூட்டத்திலிருக்கிற மற்றவர்களுக்கு …வயிற்றைக் கலக்கியது. தலைவரையே கைது செய்தது அவர்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கிவிட்டது.  இனி, மற்றதின் தாக்குதல் எப்படியிருக்கப்போகிறதோ? எனவும் பயந்தார்கள். அவர்கள் மத்தியில் இக்கரையைச் சேர்ந்த அவ்வியக்கத்தைச் சேர்ந்த அன்டன், நகுலன் என இரண்டு பெடியள் இருந்த போதும் அவர்களுக்கு சிறிதும் அக்கரையோடு தொடர்புகள் இருக்கவில்லை. தீவுப்பகுதி இன்னொரு ,எ.ஜி.எ அமைப்பு. இவர்கள்,எ.ஜி.எ யிலே இருக்கிற சிறு ஜி.எஸ் …பிரிவு.

வீட்டில், விளக்கேற்றியபிறகும் துயரத்துடன் கூட்டம் கூட்டமாக கூடி என்ன செய்யலாம் எனக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்டன், நகுலன், நடேசன் ஆகியோர் கனகன் வீட்டு மணலிலே உட்கார்ந்திருந்தார்கள். முருகேசு, பஞ்சன், தில்லை கோஷ்டி ரோட்டிலேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தது. செல்லன், தியாகப்பு போன்ற பழசுகளின் வட்டம் கோவிலடியில் இருந்தது.

அன்றைக்கு யாருமே நித்திரை கொள்ளமாட்டார்கள் போலத் தோன்றியது. கமிட்டியில் வயசானவர்கள், ஒ.லெவல் வரைபடித்த பெடியள்கள், ஒரிருவர் அரச வேலையில் இருப்பவர்கள் … என‌ ஆகியோர்கள் இருந்தனர். விசயம் அறிந்து நிதானமாக நடக்கிற அதையே அரஸ்ட் பண்ணி விட்டதால் போனவர்களுக்காக யார் கதைப்பது? எனப் புரிய வில்லை. கடைசியில், பழசுகளின் கோஷ்டி அண்டனைத் தேடி வந்தது. “தம்பி, நாளைக்கு காலையில் ஒருக்காய் போய் எப்படி, என்ன மாதிரி நடந்தது என்பதை உங்கடயாட்களிற்கு அறிவிச்சு விடு. வாசகிசாலைக்குழு மன்னிப்புக் கேட்க இருந்ததையும் சொல்லிவிடு” என்றார் தியாகப்பு.

Continue Reading →

அமரர் எஸ்.பொ 1 : சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்!

எஸ்.பொபொன்னுத்துரை  இலங்கையிலிருந்து   நைஜீரியாவுக்கு  தொழில் வாய்ப்பு  பெற்றுச் சென்ற  காலகட்டத்தில்   அங்கு  ஆபிரிக்க இலக்கியங்களை   ஆழ்ந்து   கற்றார்.  பின்னாளில்  பல  ஆபிரிக்க இலக்கியங்களையும்  அதேசமயம்  அரபு  இலக்கியங்களையும் மொழிபெயர்த்து  நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில்  ஒரு  தவம்  என்ற   விரிவான  கட்டுரையின்  முதல் அத்தியாயத்தை  வீரகேசரி  வாரவெளியீட்டுக்கு  அனுப்பினார்.  இதர அத்தியாயங்களும்   அவரிடமிருந்து  கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு   வீரகேசரி  வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர்  பொன். ராஜகோபால்  தீர்மானித்திருந்தார். எனினும்   பொன்னுத்துரை   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால்  அந்தத் தொடர்  வெளியாவது சாத்தியப்படவில்லை.   முதலாவது  அத்தியாயத்தின்  மூலப்பிரதி  பொன்னுத்துரையிடமும்   இருக்கவில்லை.    வீரகேசரிக்கு   அனுப்பிய பிரதியும்   காணாமல்போனது.   காலம்  கடந்து  பின்னாளில்  பல ஆபிரிக்க   இலக்கியங்களையும்   அதேசமயம்  அரபு இலக்கியங்களையும்  மொழிபெயர்த்து   நூலுருவாக்கினார். இவற்றுக்காக   அவர்   செலவிட்ட   நேரம்   மிகப்பெறுமதியானது.

மேலைத்தேய   மதங்கள்   பற்றியும்   கிழைத்தேய    மதங்கள்  குறித்தும்  அவரிடம்  ஆழமான  பார்வை  இருந்தமையினால் கிறிஸ்தவ – இஸ்லாமிய – இந்து – பௌத்த – சமண இலக்கியங்களையும்   ஆழ்ந்து   கற்றார்.    அதனால்தான்  அவரால் கீதையின்   நிழலில் (கல்கியில் தொடராக வந்தது)  மகாவம்ச –   மாயினி –  இஸ்லாமும்   தமிழும் –   பெருங்காப்பியப்பத்து-  காந்தி தரிசனம்   முதலான   நூல்களையும்   எழுத  முடிந்திருக்கிறது. கவிதையில்   ஆரம்பித்து ,  சிறுகதை,   நாவல்  எழுதிய  பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான    விமர்சனங்களும்  நூல்  மதிப்புரைகளும் எழுதியிருப்பவர்.   பொதுவாக  எவரும்  தமது  நூலுக்கு  முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது   இவர்  அதற்கு  முன்னீடு எனப்பெயரிட்டுத்தான்  எழுதியவர்.   எதிலும்  மாற்றம்  புதுமை நிகழவேண்டும்  என்ற  அவா   அவரைப்பற்றியிருந்தது. தமது   விமர்சன  முறைமையை   –  ” My literary criticism is more in defence of established  creative writing institution ”   என்றே குறிப்பிட்டு  வந்திருக்கிறார்.

ஆக்க   இலக்கியத்தில்  எப்பொழுதும்  பரீட்சார்த்தமான  முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்,  தமது  படைப்புகளின்  தலைப்புகளையும்  ஒரு எழுத்தில்   அல்லது  மிகவும்  குறைந்த  எழுத்துக்களில்தான்   தெரிவு செய்வார். உதாரணம்:  தீ.  – வீ   – சடங்கு  –   முறுவல் –  ஆண்மை –  மாயினி  –    அவா – ?   (கேள்விக்குறியிலும்  ஒரு  நூல்)

படைபிலக்கியத்தில்  மட்டுமன்றி   வானொலி   நிகழ்ச்சி உரைச்சித்திரங்களிலும்   அவற்றுக்கு  சிறிய   தலைப்புகளையே சூட்டியவர்.   குறிப்பாக  அவர்  இலங்கை  வானொலியில்  1970  களில் நடத்திய   ஒரு  நிகழ்ச்சிக்கு  வேர்   எனத்தலைப்பிட்டார். குறிப்பிட்ட  வேர்   என்ற  தலைப்புக்குள்  சிலரை   வானொலியில் பேசவைத்தார்.   மனித  குலத்தின்   வேரின்  சால்பையும்  – பண்பாட்டுக்கோலங்களில்  –    இயற்கையில்   வேரின்   இன்றியமையாத    தன்மைகளையும்    அந்த  வானொலிச்சித்திரம் நேர்த்தியாகவும்   தரமாகவும்    அமைத்தது. அதனால்   அந்த உரைச்சித்திரம்   பலதடவைகள்   மறு  ஒலிபரப்புச்செய்யப்பட்டது.

அதுபோன்று   அவுஸ்திரேலியா  மெல்பனில்  ஒலிபரப்பாகும் வானொலி    ஒன்றில்   அவர்   நிகழ்த்திய   மனித   குலத்தின்    உணவு நாகரீகம்   என்ற  உரைச்சித்திரமும்  முக்கியமானது.   1989  இல் குறிப்பிட்ட   3zzz   தமிழ் ஓசை வானொலி  நிகழ்ச்சியை   நடத்தியவர் பொன்னுத்துரையின்    நீண்ட  கால  நண்பர்  நவரத்தினம்  இளங்கோ என்பதும்   குறிப்பிடத்தகுந்தது.

Continue Reading →

கவிதை: காலமும். கோலமும்..

- முனைவர் இரா. இராமகுமார் -

“காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா….
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா…..”

Continue Reading →

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

Continue Reading →

(ஆய்வு) புறநானூற்றில் மனிதவளம் மேம்பாடு

  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2

என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.

மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின்  திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே  மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.

Continue Reading →

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ

– புரட்சிகரமான எழுத்தால் புதுவித உத்திகளைக் கையாண்டு தமிழ் எழுத்து உலகில் தனக்கென ஒரு இடத்தினை பெற்று நின்ற ஈழத்து எழுத்துலகச் சிற்பி  எஸ்.பொ அவர்களின் நினைவு தினமான இன்று (நவம்பர் 26)  அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது. –

தமிழ் எழுத்துலக எழிச்சியின் வடிவம் எஸ்.பொ     - எம். ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா , முன்னாள் கல்வி இயக்குநர் -எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும். எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள். ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார். இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது. ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார். எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார். எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம். பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார். படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது. இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது. ” தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ? ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார். காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம். வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை. முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.

Continue Reading →

பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ”விடியல்” நூல் அறிமுக விழா

பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ''விடியல்'' நூல் அறிமுக விழாவெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதியாக முன்னாள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அலுவல்கள் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் மூதூர் முகைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கொழும்பு பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், இப்ராஹீமிய்யா கல்லூரி பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், டாக்டர் அல்ஹாஜ். ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.),  கலாநிதி யூசுப் கே. மரைக்கார், பன்னூலாசிரியர் கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப். இல்ஹாம் மரிக்கார், அஸீஸ் மன்றத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்வார்கள்.

மௌலவி. காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் வரவேற்புரையை நிகழ்த்த வாழ்த்துரைகளை சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன், காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

Continue Reading →

தமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.

தமிழச்சி தங்கபாண்டியன்சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி,  இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும்  வளர்ந்தவர்.  கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள்  திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி,  தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே  ஊடகங்களும்  அடையாளப்படுத்துகின்றன.  சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர்.  தான் பிறந்த  கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக  நேசித்துவருபவர்.  கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த  கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி,  ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய வேளையில்  2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி,  குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். குறிப்பிட்ட ஆய்வு நூலில்,  அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட  கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983)  பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட  இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.
\
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன்,  அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில்  அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர்.  அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன்,  ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.

Continue Reading →

வாழ்வாதாரக்கல்வியும்……வாழ்வியல் திறன்களும்…..

அறிமுகம்

- முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,  எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629“கல்லா மாந்தர் இல்லா நிலையை
காலம் தான் தந்திடுமா!
பெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்
மாற்றம் தான் வந்திடுமா!
கற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை
திறன்கள் தான் வளர்த்திடுமா!
கற்றவை பெற்றவை காகிதமாகிவிடுமா!
காலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா!”

மனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

வாழ்வியல் திறன்கள்
கல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,

1. தன்னை அறிதல்.
2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.
3. பகுத்தறியும் திறன்.
4. தொடர்புகொள்ளும் திறன்.

இத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Continue Reading →