வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) & ‘தாயகம்(கனடா)’ பற்றிச் சில குறிப்புகள்..

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane)ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) ஒரு சிங்கள ஊடகவியலாளர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் , 2006இல் இலங்கையை விட்டு புகலிடம் நாடி புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களிலொருவர் இவர். மெளனிக்கப்பட்ட யுத்தத்தின்போது இலங்கைத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள், துயரங்களை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படமான ‘மெளனிக்கப்பட்ட குரல்கள்’ (The Silenced Voices) ஆவணப்படத்தில் நேர்காணப்படும் சிங்கள ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.  இலங்கைத்தமிழர்கள் நிலையை நன்கு அறிந்த, அதற்காகக் குரல் கொடுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களில் ரோகித பாஷனா அபயவர்த்தனேயின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதும் நாடு திரும்பாமல் PEN அமைப்பின் உதவியுடன், ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் ‘இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்’ என்னும் (JDS – Journalists for Democracy in Srilanka: http://www.jdslanka.org/ ) இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலொருவராகவுமிருந்து வருகின்றார். ரோகித பஷானா அபயவர்த்தனே நன்கறியப்பட்ட சிங்களக் கவிஞர்களில் ஒருவரும் கூட. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாற்றுக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்களப்பத்திரிகையான ஹிரு பத்திரிகையின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவுமிருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தது. அப்பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் கருத்துகள் காரணமாகவே இவருக்குப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவற்றின் காரணமாகவே இவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சமூக ஊடகங்கள் காரணமாகவும், யுத்தம் ஏற்படுத்திய் பேரழிவுகள் காரணமாகவும் சிங்கள மக்களில் பலர் நாட்டில் அமைதி வேண்டுமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். உணரத்தொடங்கியிருக்கின்றார்கள். நாட்டில் தமிழர்கள் சம உரிமையற்று வாழ்வதை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவசியமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் ரோகித பாஷனா அபயவர்த்தனே. இவர்களைப்போன்றவர்களைப்பற்றி, இவர்கள்தம் அரசியல் நிலைப்பாடு பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Continue Reading →

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 2!

 

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விளக்கீடு இன்று!

விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்

வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை  வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்

ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.

Continue Reading →