எதிர்வினை: வாசிப்பும், யோசிப்பும் 320 – எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

முருகபூபதிLetchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Dec. 24 at 11:51 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்! என்ற தலைப்பில் நீங்கள் பதிவிட்டுள்ள உங்களதும் மற்றவர்களதும் எதிர்வினைகளைப்படித்தேன். இறுதியில் கவிஞர் சேரன் எழுதியிருக்கும் வசனங்களைப்பாருங்கள்.

“Cheran Rudhramoorthy:  பிரபஞ்சனை இங்கே அழைத்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம். அவர் என்னுடைய முகனூலில் இல்லை என்பதால் அவரைத் தொடுக்க முடியவில்லை. கனடாவின் நல்ல இலக்கியவாதிகளின் பரிந்துரையால்தான் பிரபஞ்சன் வருகை சாத்தியமானது. எனினும் பிரபஞ்சன் வந்த பிற்பாடு எவரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் பலமுறை லோகேந்திரலிங்கத்தை அழைத்து பிரபஞ்சனுடன் பேச வேண்டும் என்று கேட்டேன். சாத்தியப் படவில்லை. இறுதியில் அவர் தமிழகம் திரும்பும் முன்பு சிறிது நேரம் பேச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பிரபஞ்சன் சொன்னதை இங்கு எழுத முடியாது. இந்த இணைப்பில் Nagamany Logendralingam, Canada Uthayan என்பதை நண்பர்கள் தொடுப்புச் செய்தால் மேலதிக விவரங்கள் தெரிய வரலாம்”

Continue Reading →

தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (5)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -

[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]

அத்தியாயம் ஐந்து!

“பகைமை இயக்கத்திற்கு வழமை போல் இது பொறுக்காத விடயம். அவர்களும் இதைப் போல் ஒன்றைத் தாமும் தயாரிக்க முற்பட்டார்கள் சரியாக அமையவில்லை. ஆயுத இருப்பு இருப்பதால், எல்லாம் மிஞ்சப் போனால் இயக்க மோதலை தொடங்கி விடுகிற, சேட்டைகளைப் புரிவதாக அது மாற்றம் பெற்று விடும். நெருக்கடியான காலகட்டம். அச்சமயம்  அவர்களிற்கு வேற புதிய பிரச்சனைகளும்  ஏற்பட்டதால் இதை பெரிதாக எடுக்காமல் விட்டு விட்டார்கள். திரும்ப எப்ப சூழ் கொள்ளும் என அறிய முடியாது?  அதனால் எல்லா ஏ.ஜி.ஏ. அமைப்புகளுக்கும் கணிசமாக‌ பணம் தேவையாயிருந்தது. குறைந்த பட்சம் ஒரிரு ஏ.ஜி.ஏ அமைப்புகளையாவது பலமானதாக வைத்திருப்பது நல்லது என்று ஜி.ஏ. கருதியது. அனைத்து இயக்கங்களுக்கும் கடை விற்பனை முகவர் நிலையங்களில் எல்லாம் பொருட்களுக்கு வரி விதித்ததால் மக்களிடமிருந்து முன்னைய மாதிரி உதவியை எதிர்பார்க்க முடியாது. எனவே இப்படி பல்வேறு வழிகளில் சேரும் பணமே இயக்கத்தை இயக்க உதவின.”

திலகன் விபரித்துக்கொண்டு போனான்.

செல்வமணி அவளர்களிருவரையும் அம்மா கூப்பிடுவதாக வந்து சொன்னாள். அவளை கள்ளமாக அளவிடுகிற திலகனின் பார்வை கனகனுக்குப் புரிந்தது. இவன் விரும்புகிறான்.மனதில் பச்சாத்தாபம் எழுந்தது. இவனைப் பற்றி நான் சரிவர அறியவில்லை எனவும் தோன்றியது.

கூழ் காய்ச்சியிருந்தார்கள். இருவருக்கும் மணி சிறிய குண்டாளக் கோப்பையில் ஊத்திக் கொடுத்தாள். கமலம் ஏதோ தையல் வேலையில் மண்குந்திலிருந்து மும்முரமாக மூழ்கியிருந்தாள். சென்னை வானொலியில் அன்று காற்றாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்கள். அதிகமாக அப்படியான அறிவிப்பு அந்தப் பகுதிக்கும் சரியாக இருப்பது வழக்கம். அதனால் யாரும் தொழிலுக்குப் போகவில்லை. லிங்கன் வந்து அன்டனையும் நகுலனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான். அவன் பாடுபட்டு எழுதிய கடிதம் அன்டனோடு போய் விட்டிருந்தது. நாலைந்து நாட்களுக்கு முன் எழுதியது. அவளிடம் போய் சேராமல் இழுபடவே அவனுக்கு அந்தரமாக இருந்தது. இருளத் தொடங்கியிருந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவர் அடைந்த அவமானமும் பற்றி எழுத்தாளர் நோயல் நடேசன் எழுத்தாளர் முருகபூபதியின் கூற்றினை ஆதாரமாகக் கொண்டு முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தார்.  அதனைத்தொடர்ந்து அது பற்றி எதிர்வினைகள் சில இடப்பட்டன. அவற்றின் தொகுப்பிது ஒரு பதிவுக்காக.

Noel Nadesan, December 21 at 7:47 PM : “பிரபஞ்சன் கனடாவுக்கு அழைக்கப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார். அவரை ஒரு விழாவுக்கு அழைத்த ஒரு ஈழத்து அன்பர் (?) சொன்னபடி செய்யாமல், ஏமாற்றி திருப்பி அனுப்பிவிட்டார். தமிழகம் திரும்பியதும் பிரபஞ்சன், ” இனிமேல் எனது வாழ்வில் சந்திக்கவே விரும்பாத ஒருவரிடமிருந்து விடைபெற்றேன்” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு ஊரில் இவரை பேச அழைத்து, அந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய பாராட்டு விருது சான்றிதழை பிரேம் போட்டுக்கொடுத்தார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவரை மீண்டும் பஸ் ஏற்றிவிடாமல் நடுத்தெருவில் விட்டுச்சென்றார்கள். நடு இரவு பஸ்ஸையும் தவறவிட்டுவிட்டு, மறுநாள் அங்கிருந்து அதிகாலை ஊர் திரும்பும்போது எதற்கு இந்த வீண் சுமை என்று, அந்த பெரிய விருதுச்சான்றிதழை விதியோரத்தில் வைத்துவிட்டு பஸ் ஏறினார். இதெல்லாம் பிரபஞ்சனின் வாக்குமூலங்கள். எழுத்தாளர்கள் சம்பாதித்தவை புகழ் – விருதுகள் மட்டுமல்ல அவமானங்களும்தான்!!!??? இதுபோன்ற அவமானங்களை இனிமேல் பிரபஞ்சன் சந்திக்கமாட்டார். பிரபஞ்சனை நீண்ட காலமாகப்படிக்கின்றேன். அவர் 1965 – 2004 வரையில் எழுதிய கதைகளின் (செம்பதிப்பு ) இரண்டு பாகங்களையும் தற்போது மீண்டும் படிக்கின்றேன். 115 ஆவது கதை ” சகோதரர் அன்றோ” படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த இலக்கிய சகோதரர் விடைபெற்றுவிட்டார். அவருக்கு எமது அஞ்சலி.  – தகவல் : முருகபூபதி”

Kannan Sundaram: இது பற்றி நானும் அறிந்தேன், ஆனால் பிரபஞ்சன் வழி அல்ல. அவர் சென்றதில் என் நல்லெண்ணத்திற்கும் சிறிய இடம் உண்டு என்பதால் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.

Noel Nadesan : இந்த விடயம் நடந்து பிரபஞ்சனால் எழுதப்பட்டது . உதய ன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் என நான் அறிந்தேன். எழுத்தாளர்களை எழுத்தோடு சம்பந்தப்படுத்தியவர்கள் மதிக்காதபோது பொதுமக்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும? இதேமாதிரி சில விடயங்கள் இலங்கையிலும் நடந்தது . அதில் பாதிக்கப்பட்டவர் வெளியாலே சொல்லாததால் மவுனம் காக்கிறேன். இவை முதலாவதோ கடைசியானதோ அல்ல .

Continue Reading →