பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்

பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.

தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்‌ஸைல்புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.

புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.

உதாரணமாக பெண்பாடுவது போல்

“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய
மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “

இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .

இதே தர்க்கத்தை நாம் வைத்தால், நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ? அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே? புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள் ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.

Continue Reading →

தோழர் சண்: நினைவு கொள்ளலும், சண் தாண்டிச்சென்ற சமூக, அரசியல் தடயங்களைப் புரிந்து கொள்ளலும்!

“நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில்…

Continue Reading →