தோழர் சண்: நினைவு கொள்ளலும், சண் தாண்டிச்சென்ற சமூக, அரசியல் தடயங்களைப் புரிந்து கொள்ளலும்!

“நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில்…

Continue Reading →

எதிர்வினையொன்று !

அண்மையில் “அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை – முருகபூபதி -” என்னும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையினைப் பதிவு செய்திருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) , கட்டடக்கலைஞர் & நகர வடிவமைப்பு வல்லுநர்; மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப்படித்தவர், ஆற்றியிருந்த எதிர்வினை என் கவனத்தைக் கவர்ந்தது. அதனை இங்கு தமிழில் தருகின்றேன்:

“கிரி, நாங்கள் கல்விப்பொதுத்தராதர (சாதாரண மற்றும் உயர்தர) வகுப்புகளைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கு, விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் விஞ்ஞானபாடத்திட்டங்களை நடத்துவதற்காகச் செல்வதுண்டு. மண்டலங்களுக்குரிய (Zonal) விஞ்ஞான இயக்குநர்கள் பகல் நேர விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்காக ‘விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பு’க்கு விண்ணப்பிக்க முடியும். தேர்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் 300 மாணவர்களை உள்ளடக்குவதற்கான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இவர்களில் 200 மாணவர்கள் அப்பாடசாலைகள் அமைந்துள்ள மண்டலங்களிலுள்ள, இவ்வகையான விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்குரிய வசதிகளற்ற, ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாகவிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழ்ப்பாடசாலைகளுக்கு ,அண்மையிலிருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் பேசும் விரிவுரையாளர்களைப் பெற்றுக்கொள்வோம். இதன் கடைசி விரிவுரையை நான் “அரச பல்கலைக் கழகங்களுக்கு வெளியில், பட்டப்படிப்பையொத்தக் கல்வித் தகமையினைப்பெறுவதற்கான விஞ்ஞான மாணவர்களுக்கான வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் ஆற்றியிருந்தேன். ‘ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்’ (Organization of Professional Associations of Sri Lanka -OPA) கடந்தகாலத் தலைவரென்ற முறையில், ‘ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்’ அங்கத்தவர்கள் நடாத்தும் பல்கலைக்கழக மான்யக் குழுவின் (University Grant Commission – UGC) அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்கள் பற்றிய விபரங்களைப் பெறும் அனுகூலம் பெற்றவனாகவிருந்தேன்.

கடந்த வருடம் இத்திட்டத்திற்கு நிதியுதவி முழுமையாகக் கிடைத்தது. இம்முறை இதற்கான் நிதியில்லை என அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. ஆக பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சமூகங்கள் தாம் இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

Continue Reading →

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 06 ஆம் திகதி மெல்பனில் நடத்தும் வாசிப்பு அனுபவப்பகிர்வும், இயக்குநர் மகேந்திரனின் சினிமா குறித்த நினைவுப்பகிர்வும்.

letchumananm@gmail.com

Continue Reading →

அஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 – 2019) சரிதம்பேசும் ” சினிமாவும் நானும்”! ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் ‘மித்ர’ பதிப்பித்த நூல்!

” நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று  02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.

” முள்ளும் மலரும் ” மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில்  இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது  எழுத்தனுபவம்,  பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.

மதுரை அழகப்பா கல்லுரியில் இவர் படிக்கும் காலத்தில் ( 1958) எம்.ஜி. ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைக்குவந்து வெற்றிபெறுகிறது. அந்த வெற்றிவிழாவை கொண்டாட மதுரைக்கும் வரும்போது அலெக்ஸாண்டர் படித்த கல்லூரிக்கும் அழைக்கப்படுகிறார்.

அந்த விழாவில் எதிர்பாரதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில் காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர் இவ்வாறு பேசுகின்றார்: ” நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை”

மண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார்.  தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர்,  தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் ” நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க ” என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.

இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.

Continue Reading →

நான் இரசித்த முகநூற் பதிவுகள் 1 : எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு – “யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’

யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்முகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’ பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன்

நாடகத்தைப் பார்க்க விரும்பினால் அதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=XG8zz6y0xFk



எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு கிழே:


“யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’ – எஸ்.எல்.எம்.ஹனீபா –


உலகின் உன்னத மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியின் இலக்கிய வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. நாம் வாழும் நமது வாழ்வையே நமக்கு காட்சிப்படுத்துவதோடு அத்தகைய இலக்கியம் நாடக வடிவுறும்போது நாமும் அங்கே நடிகர்களாகிறோம். அது பற்றி “காண்டாமிருகம்” என்ற இந்த நாடகத்தை எழுதிய உலகப் புகழ்பெற்ற “யூழேன் இயொனெஸ்கோ” இவ்வாறு குறிப்பிடுகின்றார்.


“அனைத்துப்பார்வையாளர்கள் நெஞ்சத்திலும்ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒரு விதமான வெட்கத்தை உண்டுபண்ண வேண்டும். சோகமானது ஜூர உணர்விற்கு மாறாவிட்டால் என்னுடைய சந்தோசம் துன்பத்திற்கு மாறாவிட்டால் நான் மிகச் சாதாரணமானவனாகவும், உணர்வற்றவனாகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக் கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விசயங்களின் எல்லை வரையில் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வடக்கில் வெகுதூரம் செல்ல வேண்டும் தெற்கை அடைவதற்கு, என்கிறார்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரீகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு விழுவது நமக்கு தெரிந்ததே. பாசிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசு முறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரீகத்தை தழுவிக் கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும், அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன. இந்த நாடகத்தில் ஒருத்தி கணவனை கைவிட முடியாததால் காண்டாமிருகமாக மாறுகிறாள்; மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை தரும், நம்பிக்கை தரும் ஒரு மனிதன் தான் முதலாவதாக காண்டாமிருகமாகிறான். ஒருவன் மிகத் தெளிவாக சிந்தித்து பேசிவிட்டு, ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று கூறி மாறுகிறான். எல்லோரும் மாறும் போது மாறாமல் இருப்பவர்களுக்கு தங்களைப் பற்றியே சந்தேகம் வருவது இயல்பு. இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் எளிதாக வருத்தத்திற்குள்ளாகிறவன், தவறுகளுக்கு தன்னைத்தானே மிகவும் நொந்து கொள்கிறவன், உள்மொழி விடாமல் ஒலிக்கும் மனதுடையவன், சுயசந்தேகங்களினால் விரட்டப்படுகிறவன், ஆனால் எல்லாவற்றிற்கும் எதிராக நின்று கடைசியில் மாறுதலைத் தவிர்த்து நின்று, மனிதனாக எஞ்சிப் போராட தீர்மானிக்கிறவன் இவன்தான். மனிதத் தன்மைகளை வெளிப்படையாகக் கொண்டவன் என்பதினால்.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 337: -ஈழத்துத் தமிழ்க் கவிதை -: ‘தேன்மொழி’க் கவிதைகள் – அ.ந..க.வின் ‘கடைசி நம்பிக்கை’ & ‘நான் செய் நித்திலமே’

அ.ந..க.

கவிதை: அ.ந..க.வின்  ‘கடைசி நம்பிக்கை’!

பொதுவாகப் பெற்றொர் பிறக்கும் பிள்ளை புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவர். ஆனால் இந்தத்தந்தையோ அதற்கு நேர்மாறு. காரணம் மிகுந்த புத்திக்கூர்மை மிக்க தந்தையிவருக்கு இவருடைய புத்திக்கூர்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. ‘யானோ எனது புத்தியின் கூர்மையால் , வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கின்றேன்’ என்று வருந்துகின்றார். இதனால் இவர் வேண்டுவதுதான் யாதோ? தனது பிள்ளை அறியாமையிலும், மடமையிலும் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்றார். அவற்றில் எவர்க்கும் குறைவிலாதிலங்க வேண்டுமென்று விரும்புகின்றார். 🙂

“இன்றென் நினைவு ஒன்றேயாகும் –
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச்சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்”த வேண்டுமென்று விரும்புகின்றார்.

எதற்காகத் தெரியுமா?

அப்படியென்றால்தான் ,

“ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தியிருப்பான்” 🙂

ஓரு சீனக்கவிதையின் தமிழாக்கமிது. தமிழாக்கியிருப்பவர் அ.ந.கந்தசாமி. ‘தேன்மொழி’ சஞ்சிகையின் இரண்டாவது இதழில் (ஐப்பசி 1955) வெளியான கவிதை இது. இன்று ஆட்சிக்கட்டிலுள்ள அமைச்சர்கள் பலரைப்பார்க்கும்போது இக்கவிதையில் விரவிக்கிடக்கும் அங்கதம் இதழ்க்கோடியில் புன்னகையினை வரவழைக்கின்றது. அன்று பாடியது இன்றும் நன்கு பொருந்துகிறதல்லவா.

Continue Reading →

ஆய்வு: கருத்துக் களவோ….? எனக்கது தெரியாது…!”

எழுத்தாளர் க.நவம்ஒருநாள் இளைஞனொருவன், ஒரு பத்திரிகை  ஆசிரியரிடம் கவிதை ஒன்றைப்.பிரசுரிப்பதற்கெனக் கொண்டுபோய்க் கொடுத்தான்.

அதனைப் படித்துவிட்டு, “இந்தக் கவிதையை நீயே எழுதினாயா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“ஆம், ஒவ்வொரு எழுத்தும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தான், இளைஞன்.

ஆசிரியர் மிக மரியாதையுடன் எழுந்து நின்றார். “வணக்கம், உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி  அடைகிறேன், எட்கார் அலன்போ அவர்களே! நீண்ட
நாட்களுக்கு முன்னரே நீங்கள் இறந்துவிட்டதாக நான் நினைத்தது தவறுதான்!”

எழுத்து என்பது மனித நாகரிக வளர்ச்சிப் போக்கின் ஒரு பிரதான மைல்கல். இது உணர்வுகள், சிந்தனைகள், செய்திகள் என்பவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வழிமுறை. இந்த உணர்வுகளும், சிந்தனைகளும், செய்திகளும் புதுமையானவையாகவும் கட்டுக்கடங்காதவையாகவும் மனதில் பொங்கிப் பிரவகிக்கின்றபோது, அவற்றை எழுத்தில் பதிக்க வேண்டும் என்ற உந்துலையும் உத்வேகத்தையும் பெறுகின்றவர்கள், எழுத்தாளர்கள்.

அறிவு, ஆர்வம், ஆற்றல், தேடல், தெளிவு கொண்டவர்களுக்கு எழுத்துக்கலை கைகூடிவர வாய்ப்பு உண்டு. இவையேதுமின்றி, முடவன் கொம்புத் தேனுக்குக் கொண்ட ஆசை போன்று, குறுக்கு வழியில் எழுத்தாளராக வேண்டும் என்ற சிலரது பேராசையே, எட்கார் அலன்போ போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரும் இந்நாட்களில் அடிக்கடி புத்துயிர் பெற்றுவரக் காரணமாகிப் போய்க் கிடக்கின்றது!

இவ்வாறான எழுத்துச் சூழலில், எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பிரசுரிப்பாளர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய – கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை, சர்வதேச நியம நூல் இலக்கம், சர்வதேச நியமத் தொடர் இலக்கம் போன்றன குறித்த, சில முக்கிய தகவல்களை முன்வைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்துக் களவு (Plagiarism)
இன்னொருவரது மொழிப் பாவனைகளை, எழுத்துக்களை, சிந்தனைகளை, கருத்துக்களை அல்லது படைப்புக்களை அச்சொட்டாகப் பிரதிசெய்து, அவற்றைத் தமதென்று உரிமை பாராட்டி, வெளிப்படுத்துவது கருத்துக் களவு எனப்படும்.

ஒரு தவறான அபகரிப்பு நடவடிக்கையான இக்கருத்துக் களவானது, எழுத்துத்துறையில் இந்நாட்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுவரும் பெருத்த மோசடி; ஒழுக்கம், சட்டம்சார் விதிமுறைகளுக்கு முரணான, கண்ணியமற்ற செயற்பாடு. இது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதனால், சம்பந்தப்பட்டவர்களைச் சில சமயங்களில் பாரதூரமான சட்டப் பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டது.

கருத்துக் களவில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுயகருத்துக் களவு (Self Plagiarism), தற்செயலான கருத்துக் களவு (Accidental Plagiarism), நேரடியான கருத்துக் களவு (Direct Plagiarism) என்பன பிரதானமானவையாகும்.  ஒருவர் தனது சொந்தக் கருத்தினை அல்லது எழுத்தினை, அது முன்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தம்மால் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல், மீண்டும் பயன்படுத்துதல் சுயகருத்துக் களவு எனப்படும். ஓர் எழுத்தின் மூலத்தைக் குறிப்பிடாமல் அலட்சியம் செய்தல், தவறாகக் குறிப்பிடுதல், அல்லது உள்நோக்கமின்றி மூலப் பிரதியுடன் ஒருமைப்பாடுடைய சொற்களை, சொற்றொகுதிகளை, வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்துதல் தற்செயலான கருத்துக் களவு எனப்படும். எங்கிருந்து பெறப்பட்டது என்ற பண்புக்கூற்றோ அல்லது மேற்கோள் குறியோ இன்றி, இன்னொருவரது கருத்தை, வார்த்தைக்கு வார்த்தை படியெடுத்தும், வெட்டியொட்டியும் தனதென உரிமை பாராட்டிப் பயன்படுத்துதல், நேரடியான கருத்துக்களவாகும். இதுவே மிகவும் பாரதூரமான கருத்துக் களவு எனக் கருதப்படுகின்றது.

Continue Reading →

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை –

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை -

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும் நிதிக்கொடுப்பனவு மற்றும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இலங்கையில் இம் மாதம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றன. நீடித்த போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, காலத்துக்குக்காலம், கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்குறித்த நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் 2010 – 2011 – 2014 – 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றவாறு இந்த ஆண்டும் ( 2019 ) இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன. போர் முடிவுற்றபின்னர் நடைபெற்ற ஐந்தாவது நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்திலும் – முல்லைத்தீவு விசுவமடுவிலும் – வவுனியாவிலும் – கல்முனை பெரியநீலாவணையிலும் – கம்பஹா மாவட்டத்திலும் நடைபெற்றன.

Continue Reading →