சுர்ஜித்! இனி என்றும் நீ இருப்பாய் எம் இதயங்களில் நிலைத்து

சுர்ஜித்

– மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. –


மகத்தான பூமியே!! இம்
மண்ணுக்குள் அகப்பட்ட இம்
மழலையை உன்னால்
மீட்டிட முடியவில்லையே!
ஏங்கி, ஏங்கி அப்பிஞ்சு
எவ்வளவு துடித்திருக்கும்?
எப்படியும் தன்னை மீட்பார்களென்று
எண்ணி எதிர்பார்த்திருக்கும்?
உணவின்றி, உறக்கமின்றி
உடல் நொந்து வருந்தியிருக்கும்.
ஏன்? ஏன்? ஏன்?
எதற்காக? எதற்காக? எதற்காக?
இம்மானுடப் பிறப்பு இம்
மண்ணில் எதற்காக?
மலர்ந்து பின் மடியுமிம்
மானுடப் பிறப்பு இம்,
மண்ணில் எதற்காக?
இன்பமொன்றே நியதியாக
இருக்கும் வண்ணம்
இம்மண்ணில் வாழ்வு இல்லையே?
துயர் சூழ்ந்த நிகழ்வுகள்:
துடிக்க வைக்கும் போர்கள்,
இவை போதாதென்று
இவ்விதமான அழிவுகள்
இன்னுமேன் எதற்காக?
தவழ்ந்து நிமிர்ந்த குழந்தை
தடக்கித் துளையினுள் வீழ்ந்து
துடித்து மடிந்ததும் எதற்காக?

Continue Reading →

அஞ்சலி: ஆழ்துளை அவலம்

– மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல்…

Continue Reading →

எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் கவிஞர் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல்!

கவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்

மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தின் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.

மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?

ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தோரு ஆண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2016 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முதலில் 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் என்னதிது ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா? எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.

சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன் அப்போது. ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

Continue Reading →

வாசகர் கடிதங்கள் சில..

வாசகர் கடிதங்கள்

1. Puthiyavan Siva <puthiyavan1986@gmail.com>

Oct. 28 at 1:14 p.m.

வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.

என்றும் அறிவன்புடன்
புதியவன் 


2. Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Oct. 29 at 6:02 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன்.  பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை!
ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து – அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும்.  அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள்  பார்த்திருக்கலாம். நன்றி.

அன்புடன்
முருகபூபதி


3. Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>

Oct. 29 at 5:17 p.m.

ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.

– தீவகம் வே.இராசலிங்கம்


4.

1. Sunil Joghee <suniljogTo:ngiri2704@rogers.com
Oct. 23 at 1:29 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி….

[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். ‘பதிவுகள்’ அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது.  எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு  முன்னர் இந்தியப் பழங்குடி  மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள்  நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது.  – ஆசிரியர், பதிவுகள்.]

Continue Reading →