சமீபத்திய இரு மலேசிய நாவல்கள்

- சுப்ரபாரதிமணியன் -1.கருங்காணு. – நாவல் அ ரங்கசாமி

மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள்   மற்றும்  கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு  போன்றவை  அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க  பதிவுகளாக உள்ளன  இந்த நாவல்களின்  பல அம்சங்களை  மீண்டும்  கருங்காணு நாவலில்  கொண்டுவந்திருக்கிறார்  ரங்கசாமி அவர்கள்.  1940களில் தொடங்கி  சுமார் 20ஆண்டுகள்  மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம்  இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது  பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை  மையமாக வைத்து  இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல்  மலேசிய தமிழர்கள்  மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .

இந்த நாவல்  நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை  ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு  சில உரிமைகள் கிடைக்கிறது.  இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து  கொண்டிருக்கிறார்கள் . அதை  தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள்  ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள்  சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள்  என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில்  செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள்  மூலம்  என்னை தயாரித்து  வெளிக்கொணரப்படுகிறது என்பது  ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது  சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில்  இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  இந்த பாம் ஆயில்  எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .நெல் சோறு பற்றி கேள்விப்பட்டு இருப்போம்  இதில்  மரவள்ளி சோறு பற்றிய குறிப்புகள் உள்ளன . உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற ரீதியில் தமிழர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள் உடைய  ஆக்கிரமிப்பு  தமிழர்களின்  வாழ்க்கையில் பல சோதனைகளை எழுப்புகிறது . பிறகு 1953  அவர்கள் சரணடைந்து விடுகிறார்கள்  அதற்கு பின்னால் வருகின்ற காலகட்ட  சோதனைகளும் விளக்கப்பட்டுள்ளன.  நமக்கு எல்லாம் நல்ல காலம்தான்  வெள்ளைக்காரன் சீக்கிரம் திரும்பி வந்து விடுவாள் பழைய காலம் திரும்பும் என்று பல நம்பிக்கைகள்   சிலருக்கு வருகின்றன  ஆங்கிலேயன் வருகின்றான், அவருடைய நடவடிக்கைகளும் உழைப்பாளர்களுக்கு எதிராகவும் இருக்கிறது , சுதந்திரம் , பெரும் கலகம்  நேதாஜியின் எழுச்சியும்  மரணமும்  விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது  நேதாஜியின் மரணம் சார்ந்து தமிழர்கள் வாழ்வில்  எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளும் சொல்லப்பட்டிருக்கிறது  .

Continue Reading →

ஆய்வு: இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். சமூகம் என்பது சகமனிதர்களின் வாழ்வியல் திரட்சி ஆகும். மனித வாழ்வியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியையும் சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் சார்ந்து இயங்குதல் ஆகும். சார்ந்து இயங்குதலை சமூகக் கருத்தியல்கள் நெறிப்படுத்துகின்றன. கருத்தியல்களின் ஆகச்சிறந்த களமாக இலக்கியம் திகழ்கிறது. எனவே இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் அதி முக்கியக் களமாகச் செயலாற்றுகின்றது. இலக்கியங்களை அணுகுதல் என்பது சமூகப் பண்பாட்டு நிறுவனங்களை அணுகுதல் என்பதன் அங்கமாகும். இதனால் மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமானக் களமாக இலக்கிய அறிவியலை உணரலாம்.

இலக்கிய அறிவியல் என்ற தலைப்பிற்குள் இரண்டு சிந்தனைகளை முதன்மைப்படுத்துகிறோம்.

1.  இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்.
2.  இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்

இலக்கியத்திற்கு வரையறை கொடுப்பதென்பது மொழித் துறையில் சமூகவிஞ்ஞானம் ஆற்ற வேண்டிய அதிமுக்கியக் கடமையாகும். எனவே இங்கு இலக்கியத்தை விளங்கிக்கொள்ள வரையறை செய்துகொள்வோம்.

இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்

எது இலக்கியம்?

இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல் ஆகும். இலக்கு என்பது கருத்தியல் வெளிப்பாடாகும். இயம்புதல் என்பது பேசுதல் ஆகும். எனவே கருத்துக்களைப் பேசக்கூடிய களமாக இலக்கியம் இயங்குகிறது. இலக்கியத்தைத் துல்லியமாக வரையறுக்க முயலலாம்.

இலக்கியம் என்பது

சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான
ஒரு மொழியின் படைப்புகளாகும்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 351 : கிடைத்தது சாண்டில்யனின் ஜீவபூமி (ராணிமுத்து)

என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது நானென் குடும்பத்தவருடன் வசித்து வந்த வவுனியாவில்; என் பால்ய பருவத்தில். வாசிப்பு என்பது அக்கினிக் குஞ்சு போன்றது. விரைவாகவே பெருஞ்சுவாலையுடன் பற்றியெரியத்தொடங்கிவிடும். அதனால்தான் அக்காலகட்டத்தில் வாசித்த பல்வகை வெகுசன இதழ்களில் வெளியான புனைகதைகளெல்லாம் இன்றும் அழியாத் கோலங்களாக நினைவில் நிலைத்து நிற்கின்றன. அவ்விதம் அவை இன்றும் இனிமை தருவதற்கும் , நினைவில் நிலைத்து நிற்பதற்கும் மிகவும் முக்கியமான காரணம் அவை மானுட வாழ்வின் இனிமையான ஒரு பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டுவருவதால்தான்.


என் பால்ய பருவத்தில் எவ்விதம் வாசிப்பு என்னை ஆட்கொண்டது என்பது பற்றி அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கின்றேன். அம்புலிமாமா, ராணி, ராணிமுத்து, கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கண்டு, பொம்மை, பேசும்படம், பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வேதாள மயாத்மா பற்றிய இந்திரஜால் காமிக்ஸ் , குமுதம், ஈழநாடு (யாழ்ப்பாணம்), வீரகேசரி, மித்திரன், தினகரன், தினமணி.. இவ்விதம் சஞ்சிகைகளை, நூல்களை வாங்கி வீடெல்லாம் குவித்து வைத்தார் அப்பா. இவற்றுடன் தனக்கு மேலதிகமாக பென்குவின் பதிப்பக நூல்களை, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கினார் அப்பா. இதனால் என் ஒன்பதாவது வயதிலேயே பெரும்பாலான தமிழகத்தின் வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை, முழுநாவல்களையெல்லாம் தீவிரமாக வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன். இவ்விதம் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதற்காக வீட்டில் எப்போதும் குழந்தைகள் எமக்கிடையில் போட்டி நிலவும். அவ்வப்போது எல்லோரும் சுற்றிவர இருந்து சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை அத்தியாயம், அத்தியாயமாகச் சேகரித்து ‘டுவைன்’ நூல் கொண்டு , கட்டி வைப்போம்.


இவ்விதமாக ‘பைண்டு’ செய்யப்பட்ட என்னிடமிருந்த முக்கியமான படைப்புகளாகப் பின்வருவனற்றைக் கூறுவேன்:

Continue Reading →

வாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கிய டொமினிக் ஜீவாவிடமிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

வாழ்வை  எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

அவரை  முதல் முதலில் நான் சந்தித்த இடம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி.  அங்கு நான் கற்றவேளையில்  அதன்  பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரி என மாற்றம் கண்டது. நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் எழுத்தாளர் டொமினி ஜீவாவை அழைத்து,   கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள். ஒரு துவிச்சக்கர வண்டியில் வந்து பேசினார்.  வெள்ளை நிறத்தில் வேட்டியும் நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல் முதலில் அவரையும் பனைமரத்தையும் பார்த்தேன். எனக்குத் தெரியாத சங்கானை சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த வருடம் 1963.

அவர் அன்றுசொன்ன சாதிவேற்றுமை சமூக ஏற்றத்தாழ்வு என்பன பற்றிய புரிதல் அக்காலத்திலேயே அந்தக்கல்லூரி அமைந்திருந்த அரியாலைப்பிரதேசத்தில் நேரடியாக எனக்கு  கிட்டியது.  எந்தவொரு  சொந்த பந்தங்களும் இல்லாதிருந்த அந்தப்பிரதேச வாழ்க்கை எனக்கு,   எனது பூர்வீக ஊர்மீதும் வீட்டின் மீதும் ஏக்கத்தையே வளர்த்தது. என்னுடன் படித்த எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் தனது குடும்பத்தை விட்டு வந்த ஏக்கமிருந்தது. 1965 இல் அங்கிருந்து விடைபெற்று ஒரு நாள் இரவு புறப்படும் தபால் ரயிலில் கொழும்பு வந்து எங்கள் ஊர் திரும்பிவிட்டோம்.

அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார் பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.  ஒரு மாணவனாக  அங்கு சென்று திரும்பிய என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக மாற்றி  மீண்டும்  அங்கு அழைத்து எனது முதல் கதைத்தொகுதிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகநிகழ்வு நடத்தி பாராட்டியவர்தான் அவர்.

Continue Reading →

இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

ஒரு நர்த்தகி என்பவள் தனது உடலைப் பயிற்சிகளுக்கு  உட்படுத்தி குறிப்பிட்ட கலையில் அழகியல் அம்சம்  நிறைந்த உடலாக மாற்றியமைக்கின்றாள். அவளது உடல் அதிகளவு அழகிய அம்சமுடைய சக்தியின் இருப்பிடமாக விளங்குகிறது. அந்த வகையில் பரணீதரி தில்லைநாதன் தன்னைப் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்தி விடாமுயற்சியுடன் ஒரு தாயாக நின்று அரங்கேற்றம் செய்வது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

Continue Reading →

இரவில் நான்


இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்

Continue Reading →

மா -னீ கவிதைகள்!

மா -னீ கவிதைகள்!
1.

இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

நான்கிற்கு நான்காய்  வீடு
நடுவில் நீளமாய்  மேஜை
துணி விரித்துப்  போட்டு

விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து 
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

Continue Reading →

மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41

எனது 41 கவிதைகள் ‘வ.ந.கிரிதரன் கவிதைகள் 41’ என்னும் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் வடிவிலேயே மின்னூல் கிடைக்கும். எதிர்காலத்தில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். வாங்குவதற்கான இணைய இணைப்பு:

Continue Reading →

மின்னூல் வாங்க: நாவல் – அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’

மின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல் தற்போது மின்னூல் வடிவில், ‘பதிவுகள்.காம்’ வெளியீடாக வெளியாகியுள்ளது. வாங்க விரும்பினால் அதற்கான இணைய இணைப்பு: மின்னூலின் அறிமுகக் கட்டுரை: அ.ந.க.வின் மனக்கண் – வ.ந.கிரிதரன் –

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது ‘தணியாத தாக’த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் ‘களனி வெள்ளம்’ என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் ‘மனக்கண்’ நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போதைய அதன் இயக்குநர் விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை ‘லீகல் சைஸ்’ அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை. நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

Continue Reading →