ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை) திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.
எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்
எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்
பெண் கண்ணை மீன் என்று,
பெருங் கவியில் எழுதிவைத் தேன் !
உன் கண்ணோ தூண்டி லதாய்,
உடன் என்னைக் கவ்விய தேன் ?
சிலைபோல் நீ அழகு என்று,
சிறப்பாய் நான் உவமையிட் டேன் !
சிலைபோல் நீ கல்லு என்று,
சிரத்தினை ஏன் முட்டவைத் தாய் ?