ஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?

முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லர்கள் – அறிமுகம்

கொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”        புறம். 312.3

என்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

பெயர்க்காரணமும் வேறுபெயரும்
கொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading →

மதுரைக் காஞ்சி வெளிப்படுத்தும் நிருவாக மேலாண்மைத்திறன்

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் ஆறாவதாக இடம்பெறும் மதுரைக்காஞ்சி அளவில் பெரியதாகும். பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையின் மாண்பையும், அதனை ஆண்ட தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் செம்மாந்த பண்புகளையும் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் பாடுகிறார். காஞ்சித் திணையின் பாடுபொருளான நிலையாமையையும் பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்துகிறார். மேலும் பாண்டிய மன்னனின் நிருவாக மேலாண்மைதிறன்  சிறப்பாக / செம்மையாக விளங்கியதை இவர் பாடலில் காணமுடிகிறது. இவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. பாண்டிய மன்னராட்சியில் நிலவிய சங்கக் காலத்துச் சமூக நிலை, அரசியல் நிலை, நீதி வழங்கும் நெறி முறைகள்,  அறங்கூறும் அவையம், வணிகநிலை சமய நிலை, தொழிலாளர் நிலை, பெண்களின் நிலை, விழாக்கள், மன்னனின் கொடை போன்ற பல்வேறு நிருவாகத்திறன்களை மதுரைக்காஞ்சி வாயிலாக அறியமுடிகிறது.

சமூகஅமைப்பு:
பழந்தமிழர் சமுதாயத்தில் சாதிப்பிரிவினை இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை மக்கட்பாகுபாடு, இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. நிலஅமைப்புக்கு ஏற்ப மக்கட்பாகுபாடு இருந்தது. இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வையே மேற்கொண்டனர்.

நீர்வளமும் நிலவளமும்:
ஒரு நாடு நன்னாடாக விளங்குதற்கு மக்கள் உணவுக் குறையின்றி வாழ்தல் வேண்டும் எள்பதே மன்னரின் தலையாய கடமையாக இருந்தது. எனவே நீர்வளமும் நிலவளமும் பெருக்குதலைத் தமது கடமையாகக் கொண்டனர். இயற்கைப் பகையாகிய பசி ஒழிதல் வேண்டும். உணவுப் பொருளைப் பெருக்குவதற்கு நிலத்தை வளப்படுத்தல் வேண்டும். இத்தகைய வளமை பாண்டிய நாட்டில் நிறைந்து இருந்ததையும் காணமுடிகிறது.

Continue Reading →

“ புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் “ – புதுவை யுகபாரதியின் இயக்கத்தில் ஆவணப்படம் :

 - சுப்ரபாரதிமணியன் -

எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றியக்  கட்டுரைகளும் படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்த படைப்பாளிக்கு கவரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்துகொள்ள இவ்வகை படைப்புகளும் ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர்  ஆளுமை குறித்த ஆவணப்படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கியிருக்கிறார் . புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் அவரின் வயது 80……

50 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார் .அதில் மரபு கவிதைநூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை .இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக்கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள் .இந்த சூழலில் மரபுக்கவிதையின் ஓசைநயம் அவற்றை பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டுவருவது மற்றும் நெடும் கவிதைகள் அதன் நீட்சியாக காப்பியங்கள் ,காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையை சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச்சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது .இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள் .இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனார்

Continue Reading →

ஈழத்து ஆளுமைகளின் ஒப்பபுதல் வாக்கு மூலங்கள்: எம்.பௌசரின் ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

‘நேர்காணல்’ இன்று தவிர்க்க முடியாதபடி நவீன இலக்கியத்தில் ஒரு கலை வடிவமாக உருப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக்கலை, நாடகம் போன்றே ஆளுமைகளின் நேர்காணல்கள் யாவும் தொகுப்புக்களாக ஒரு கலை வடிவமாக  உருமாற்றம் அடைந்துவரும் மேற்கத்தைய சூழலில், அதற்கு சளைக்காத வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் நேர்காணல் வடிவம் ஆனது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்காணல்கள்   ஆனது பிரதிகள் மூலமே அறியப்பட்ட ஒரு ஆளுமையின், அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை எமக்கு உருவாக்கித் தருகின்றன. இவை  முக்கியமாக ஒரு ஆளுமையின் வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, மாறுபடும் கால, சூழலிற்கு ஏற்ப மாறுபடும் அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன குறித்த ஒரு நேரிடையான, தெளிவான பார்வைகளை  வெளிப்படுத்தி நிற்கின்றன.

90 களின் ஆரம்பித்தில் இருந்தே நேர்காணல் ஆனது நவீன தமிழ் இலக்கியச் சூழலில், அதிலும் முக்கியமாக சிறுபத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது. பல தருணங்களில் இலக்கியச் சூழலில் ஏற்படுகின்ற சோர்வினையும் அயற்சியினையும், நேர்காணல்கள் ஆனது அது ஏற்படுத்திய சர்ச்சைகள் மூலமும் பரபரப்புக்கள் மூலமும் விரட்டியடித்த வரலாறினை பல்வேறு காலகட்டங்களிலும் நாம் அவதானித்து வந்திருக்கின்றோம். இவ்வகையில் தமிழகத்தில் சுபமங்களா, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்கள் நேர்காணல்களை சிறப்பித்த இதழ்களாக அல்லது நேர்காணல்கள் மூலம் சிறப்புற்ற இதழ்களாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். இந்த நேர்காணல்களுக்காக மட்டுமே இவ்விதழ்களை காசு கொடுத்து வாங்கிப் படித்தவர்களும் உண்டு. இவ்விடயத்தில் ஈழத்தமிழ் இலக்கியமானது தனது கவனிப்பினை சரியாக செய்யாத நிலையில் , 90 களின் இறுதியில் இருந்து வெளிவர ஆரம்பித்த எம்.பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மூன்றாவது மனிதன்’ இதழானது தனது ஒவ்வொரு இதழிலும் ஒன்று அல்லது இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனான  நேர்காணல்களுடன் வெளிவந்து நேர்காணல்களுக்கும் இலக்கியத்திற்குமான உறவை பலப்படுத்தி நின்றது. இவற்றிடையே  மூன்றாவது மனிதன் பதிப்பகம் ஆனது இந்நேர்காணல்கள் பலவற்றினதும்  தொகுப்பாக ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற நூலினை வெளியிட்டு ஈழத்தமிழ் இலக்கிய உலகில் நேர்காணலுக்கான ஒரு நூலினை  முதலாவதாக வெளியிட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தடத்தைப் பதித்து விட்டிருந்தது.  இங்கு தோழர் பௌசரினால் தொகுத்தளிக்கப்பட்ட இந்நூல் குறித்து ஒரு பார்வையினையும் சில கருத்துக்களையும்  முன் வைப்பதே எமது நோக்கமாகும்.

Continue Reading →

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!


31.01.2020
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசை குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து உறுதியாக குரலெழுப்பி வருபவர். அது குறித்த தம் கருத்துக்களைத் துணிச்சலாகப் பொதுவெளியில், கட்டுரைகள், ஊடக உரையாடல்கள், உரைகள் மூலம் முன்வைப்பவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது போல், 02.02.2020 அன்று நடக்க இருந்த அவரது சென்னை புத்தக வெளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.

‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற  அவருடைய சமீபத்திய நூல்  மிருதங்கம் மற்றும் அதனை  உருவாக்குபவர்கள் குறித்ததாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிருதங்கம் உருவாக்குவதற்கான மாட்டுத்தோலை பதப்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், மிருதங்கம் குறித்த வரலாற்றில் அவர்களது பங்கு, பாத்திரம் இடம் பெறுவதே கிடையாது  என்ற  சாதிய பாகுபாட்டு கோணத்தை பின்புலமாக எழுதியுள்ளார். மிருதங்க வரலாற்றில்  இதுவரை  கொண்டாடப்படாத அவர்களை கொண்டாடுவது என்பதே இந்த நூலின் முக்கிய அம்சம் என்று  ஒரு ஊடக பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 2 அன்று மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனமான கலாஷேத்ரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கடைசி நேரத்தில் கலாஷேத்ரா நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கான தங்களது அரங்கத்தை தர முடியாது என மறுத்து விட்டது. மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கலாஷேத்ரா நிர்வாகம் இவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதென கருத வேண்டியுள்ளது. கலைகளை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனம் சிறந்த இசைக்கலைஞரின் ஆய்வு பூர்வமான நூலை வெளியிட அனுமதி மறுத்திருப்பதை ஏற்கவே முடியாது.

Continue Reading →

‘டொரோண்டோ’ நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?

'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?இன்று பிற்பகல் ‘ஃபிளெமிங்டன் பார்க்’கில் அமைந்திருக்கும் ‘டொராண்டோ பொதுசன நூலக’க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில்  தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் ‘இன்னும் ஓரிரு மாதங்களில் ‘டொரோண்டோ’விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்’ என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. ‘என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா?’ என்று வியப்புடன் கேட்டேன்.

என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் ‘துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்’ என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?’ என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் ‘அநேகமாக ‘ரீசைக்கிள்’ செய்வார்கள் ‘என்றார்.

உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.

உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு ‘ஓர்டர்’ தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.

Continue Reading →