படித்தோம் சொல்கின்றோம்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் “காணாமல் போகவிருந்த கதைகள்“! சமூகம் எப்படி இருக்கவேண்டும்..? என்பதை ஆதங்கத்துடன் சொல்லும் வாழ்வின் தரிசனங்கள்!

முருகபூபதிசமூகம்  இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள்  ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள்  நிகழும். பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத்  தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும். சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில்,  தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில்  இன்ன பிற காட்சிகளில்  கிடைக்கும் சித்திரம்  மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.

இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை,  நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன். ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும்  அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான  ஐ. சாந்தன். சாந்தனுக்கு கோரியை   அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ்   அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.

Continue Reading →

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று ( 31.1.2020 ) நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா’

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -இரண்டாம் உலக யுத்தத்தின்பின், ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக ‘ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி’ ஆரம்பிக்கப் பட்டது.அதில் பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ‘பனிப்போர்’ உச்ச நிலையிலிருந்தது. பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததால்,பிரித்தானியாவின் பொருளாதாரநிலை மிகவும் சிதைந்த நிலையிலிருந்தது.

ஐரோப்பாவுடனிணைந்திருப்பது பிரித்தானியாவுக்குப் பல விதத்திலும் பாதுகாப்பாகவிருக்கும் என்பதால்.பிரித்தானியா ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டியுடன்’  இணைவதற்கான கோரிக்கையை 1961ம் ஆண்டு முன்வைத்தபோது,ஆங்கிலேயர்களைப் பிடிக்காத பிரான்ஸ் நாட்டின் தலைவர் சார்ள்ஸ் டி கோல், பிரித்தானியா தங்களுடன் சேர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியாவின் கோரிக்கையை 63லும் 1967லும் நிராகரித்தார்.1969ல்  பிரான்ஸ் தலைவர் பதவியிலிருந்த சார்ள்ஸ் டிகோல் இராஜினாமா செய்தபின் நிலைமை மாறியது.

1.1.1973ல்; ஆண்டு பிரித்தானியா, ‘ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டி நாடுகளுடணிணைந்தது .இங்கிலாந்தில் இடதுசாரி பாராளுமன்றவாதியான ரோனி பென் (ஜேரமி கோர்பினின் குரு) போன்ற இடதுசாரித்தலைவர்கள் அதை எதிர்த்தார்கள்.

Continue Reading →

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

நிகழ்வுகள் / அறிவித்தல்கள்

பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.

மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.

போட்டிக்கான விதிமுறைகள்

சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.

Continue Reading →

இலண்டனில் மனஅழுத்தம் பற்றிய கருத்தரங்கு

தொழில்நுட்பம் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி நாம் பிறந்து வளர்ந்த நாடுகளிலும் அசாதாரண செயல்கள் இடம்பெறுவது கவலை தருகின்ற விடயமாகும். தமது சூழலுக்கேற்ற நடத்தை நியமங்களினின்றும் தவறி ஒருவர் நடந்துகொள்வாரானால் அவரது நடத்தை அசாதாரணமானது என்று நினைக்கத் தோன்றுகின்றது. புலம்பெயர்ந்து வசதிபடைத்த, கல்வி வளங்கள் சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினரிடமும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்லமுடியாது மனம் சோர்வதை அவதானிக்க முடிகின்றது. மனம் பதட்டமடைந்து மற்றவர்களுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. எமது சமூகத்திடையே இடம்பெறும் இவ்வகையான கவலையான செயல்களை ஆராய்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை எம்மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் லண்டனில் வாழும் கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால்  மன அழுத்தம் பற்றிய கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. மன்றத்தின் தலைவி சிவா றூபி, செயலாளர் துர்கா சிவான்தன், பொருளாளர் அனன்னியா ஐங்கரன் ஆகியோரின் முயற்சியில் லண்டன் ஹரோ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.

Continue Reading →

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (5) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்’

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (5) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

” என்ன தூக்கக் கலக்கமா ” என்றேன்.

” இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு” என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

“என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?” என்றேன்.

அதற்கவன் “இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்..” என்றான்.

“என்ன ஆனால்..?” என்றேன்.

“ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்” என்றான்.

“என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?”

” ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?”

Continue Reading →