முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வு

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வுஇப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நூல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நூலுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.   கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத் தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நூல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நூல் வித்தியாசமான ஒரு நூலாக இருக்க வேண்டுமென எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். நூலைத்திறந்து உள்ளே நோக்குகையில் நூலின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நூல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

Continue Reading →

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்புயாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.

மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடகவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Continue Reading →