கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை நினைவாக தமிழ்ழ் ‘விக்கிபீடியா’க் குறிப்புகள்: முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 – செப்டம்பர் 21, 2005) .

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி மீள்பிரசுரமாகும் கட்டுரை. தமிழ் விக்கிபீடியா இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

Continue Reading →