ஊர் திரும்புதல் – சிறுகதை

கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. கே.எஸ்.சுதாகர்கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20,  திகதி : 25.05.2011 நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில்  மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும்  நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம்  இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

முகநூல் குறிப்புகள் – 2

எம்ஜிஆர்முகநூல் குறிப்புகள் - 2புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?’ பாடல் பதிவுக்கான கருத்து…

அப்துல் மஜீத்: ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிழவரும் இந்தப்பாட்டில் எம்ஜிஆரிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னை நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது. பிறகு பலரிடம் சொல்லியுமிருக்கிறேன். does anybody agree?

கிரிதரன்: நண்பரே, அந்த ஆட்டுக்குட்டியை விட்டு விட்டீர்களே 🙂   நிச்சயமாக அந்த ஆட்டுக்குட்டிக்குச் சில வேளைகளில் விருப்பமில்லாமலிருந்திருந்தாலும், மனிதர்களுக்கு வாத்தியாருடன் திரைப்படத்தில் நடிக்கிறோமென்ற சந்தோசம்தான் நிறைந்திருக்குமென்று நினைக்கின்றேன். பாட்டும், டி.எம்.எஸ்ஸின் குரலும், கூறும் பொருளும், வாத்தியாரின் ஆளுமையும்தாம் பார்ப்பவர்கள். கேட்பவர்களுக்கு இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். மேலும் வாத்தியார் ரசிகனாயிருந்தேன் என்று இறந்த காலத்தில் அடிக்கடி பல ஆளுமைகள் , கலாப்பிரியா முதல், கூறுவதைக் கேட்டு வருகின்றேன். இதன் மூலம் அவர்கள் என்ன கூற வருகிறார்களென்றால்.. தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான கூற்றுகள் எனக்கு எப்பொழுதுமே புன்னைகையினைத்தான் ஏற்படுத்துவது வழக்கம்.

Continue Reading →