நினைவுகளின் சுவட்டில் (98)

(98) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு யார் எப்போது எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நினைவு படுத்திச் சொல்வது கடினம். வந்தார்கள். பிறகு வேறு வீடு கிடைத்ததும் சென்றார்கள். சிலர் தேவசகாயம் போல் தமக்கென வீடு கிடைத்த பிறகும், “என்னத்துக்கு அங்கே போய்க் கிடந்துக்கிட்டு..” என்று அலுப்புடன் என்னுடனேயே தங்கினார்கள். இந்த வீட்டில் கிடைக்கும் நண்பர்கள் குழுவையும் அது தந்த கலகலப்பையும் ஆனந்தத்தையும் வீட்டு தனியே போய் எங்கோ முடங்கிக் கிடப்பானேன்.

Continue Reading →