தினமணி.காம்: ரா.கி.ரங்கராஜன் காலமானார்

ரா.கி.ரங்கராஜன்19, 2012- சென்னை:பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும், ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு தோளாக, தளபதியின் வாளாக, நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், நேற்று காலமானார்.கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், “எப்படி கதை எழுதுவது?’ என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. “சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், “படகு வீடு, பட்டாம்பூச்சி’ ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.மனைவி கமலா, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

Continue Reading →