ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி

அறிமுகம்

சு. குணேஸ்வரன்ஒரு இனக்குழுமத்தின் உயிர்ப்பின் அடையாளமாக இருப்பது மொழி. அது பண்பாட்டின் வழிவந்த ஊற்று. மொழியின்றேல் இனமில்லை. அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லை. பல்பண்பாட்டுச் சூழலில் புலம்பெயர்ந்து, தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும் தமிழைப்பேச வைப்பதற்கும் தமிழினூடாகத் தமிழர் என்ற அடையாளத்தைக் கையளிப்பதற்கும் பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆற்றிவருகின்றனர். இவ்வகையில் அந்நாடுகளில் வாழ்கின்ற இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனைக்குரியதாக இக்கட்டுரை அமைகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் – தலைமுறை

60 களில் இருந்தே இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பித்து விட்டதாயினும் அது பண்பாட்டு ரீதியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியதென்று கூறமுடியாது. ‘மூளைசாலிகள் வெளியேற்றம்’, ‘தொழிலுக்கான புலப்பெயர்வு’ என்ற வகையிலேயே அவை அமைந்திருந்தன. ஆனால் 80 களில் இருந்தான புலப்பெயர்வே இங்கு முக்கியமாக கருத்திற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை ‘தலைமுறை’ என்று வகுத்துப்பார்த்தால் தற்போது இரண்டாந் தலைமுறை தாண்டி மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது.

Continue Reading →