நாள்: 15-09-2012 & 16-09-2012
இடம்: கழுகு மலை (கோவில்பட்டி), குற்றாலம்.
கட்டணம்: அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம் தொடங்கவிருக்கிறது. தேசாந்திரி போல் சுற்றுவதற்கு நாம் கோணங்கியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோணங்கியோடு ஒரு நாள் முழுவதும் இருப்பதும், அவர் கையால் வைத்துக் கொடுக்கும் கருப்பட்டி காப்பியைக் குடிக்கவுமே நான் அடிக்கடி கோவில்பட்டி செல்ல விரும்புவேன். இந்த முறை இந்த வாய்ப்பு கலந்துக் கொள்ளும் அனைவருக்கும்.