தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.
ஜெயமோகனின் ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் அண்மைய பதிப்பினை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதில் மூன்றாவது அத்தியாயமான ‘இலக்கியத்தை எதிர்கொள்ள’லின் இறுதியில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்: “இலக்கியம் கருத்தைச் சொல்வது என்று எண்ணும் வாசகர்கள் செய்யும் தவறு என்ன? எளிமையாகக் கூறப்போனால் அவர்கள் இலக்கியத்தை அறிவுத் துறைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்கள். பல சமயம் தத்துவம், ஒழுக்கவியல், மதம், அரசியல் முதலிய பிற துறைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய ஓர் உப- அறிவுத்துறையாகக் கருதுகின்றார்கள். இது பெரும் பிழை. இலக்கியம் என்பது ஒரு கலை.” ஜெயமோகனின் இக்கூற்றினை வாசித்தபொழுது என் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் இலக்கியம் பற்றிச் சிறகடித்துப் பறந்தன. இலக்கியத்தை வெறும் கலையாகக் கருதும் ஜெயமோகன் இலக்கியத்தைத் தனியாகப் பிரித்து வைக்கின்றார். இலக்கியம் ஒரு கலை. ஆனால் அதே சமயம் அந்தக் கலை ஒரு போதுமே தனித்து இயங்க முடியாது. ஏனைய துறைகளெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். பொதுவாக இலக்கியமென்றதும் பலர் அதனைக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை உள்ளடக்கியதாக மட்டுமே கருதிக்கொண்டு விடுகின்றார்கள். அந்தத் தவறினைத்தான் ஜெயமோகனும் செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. இதனை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பதற்கு இலக்கியமென்றால் என்ன என்பது பற்றிச் சிந்தனையினைச் சிறிது திசை திருப்புவது நன்மை பயக்கும்.
அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘உயிர்மை’ மாத சஞ்சிகையில் ‘பறவைக்கோணம்’ என்றொரு பத்தி எழுதிவருகின்றார். இம்முறை (செப்டம்பர் 2012) உயிர்மை இதழில் வெளியான பத்தி ‘வல்லவன் ஒருவன் – பளிங்கினால் ஒரு மாளிகை’ என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. அதில் ராமகிருஷ்ணன் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ‘பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் என்ற வல்லவன் ஒருவன் படப்பாட்டைப் பல ஆண்டு காலமாகத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்பாடல் தரும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாகவே இருக்கிறது.’ ஒரு பாடல் எவ்விதம் கேட்பவரைப் பொறுத்து வித்தியாசமான விளைவுகளை எற்படுத்துகிறதென்பதற்கு ராமகிருஷ்ணனின் மேற்படி பாடலைப் பற்றிய கருத்துகள் எடுத்துக்காட்டு.
[தனது முகநூல் பக்கத்தில் ‘பாலன் தோழர்’ மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் ‘சிறைக்குறிப்புகள்’ நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் ‘பதிவுகள்’ வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். – பதிவுகள்-]
இலங்கை மலையகத்தைச் சேர்ந்த இர.சிவலிங்கம் என்பவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து “சிறைக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்….அவர் பற்றி மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்ட்டுள்ளது. ‘அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுதலைக்காக ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர.சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதே நேரத்தில் அச் சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர். நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு அசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனட்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல். அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல்.
The title of Asoka Handagama’s beautiful film Ini Avan is a play on words. The phrase “ini avan” means “him hereafter”, while the single word “iniavan” means “sweet, good-natured man”. In the aftermath/hereafter of the war, the titular “Avan” (“Him”), an unnamed LTTE soldier, comes home from a government rehabilitation camp hoping to find meaningful work, reconnect with his lost love, and create a new life as an “iniavan” in his old village. But the village has turned against Avan and the separatist cause he fought for. From the first moments in the film, his old neighbours, all believably portrayed by amateur actors, stare at him in disapproving silence, and a child runs away from him. An old man comes to shout that Avan “killed” the man’s sons by luring them into the LTTE; we learn that he recruited everyone in the village who supported the cause, and they all died in the war. It was only Avan who survived to return and face those who were left behind to mourn their relatives while living in fear of LTTE extortion and government violence. He doesn’t want to face them, though. When anyone tries to talk to him, he replies, “piraiyosanam illai”: “no point”.
[ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. – வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.