[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை ‘பதிவுகள்’ எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியினை அனுப்பியிருக்கின்றார். அக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-] அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. ‘அம்மா’, கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது. இந்தச் சிறப்பிதழ்களில் மல்லிகை, கணையாழி, ஜீவநதி என்பவை கனதியான படைப்புகளைக் கொண்டிருந்தன.
மலேசியா கோலாலம்பூரில் ந்டைபெற்ற , நான் கலந்து கொண்ட மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நாவல் பட்டறையில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், தங்களுக்குப் பிடித்த நாவலைப் பற்றி பேச வேண்டும் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இடம் பெற்ற நாவல்களின் பட்டியலில் அதிக எழுத்தாளர்களைக் கவர்ந்தவையாக மலேசிய எழுத்தாளர்களின் இரு நாவல்கள் இடம் பெற்றன.
1. ரெ.கார்த்திகேசுவின் ” சூதாட்டம் ஆடும் காலம் “
2. எஸ்.பி.பாமாவின் ” தாயாக வேண்டும் “
செயற்கை கருத்தரிப்பு, சர்வாகேட் வுமன் *, மிட் மதர் * ” என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும், பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப் பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.
கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் எழுதிய மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு 02.12.2012. ம் திகதி காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி. கபிபுள்ளா மௌலவி தலைமை தாங்கினார். கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். கவிஞர் பி.ரி. அஸீஸ் மற்றும் பிரதம அதிதிகளான டொக்டர் ஹில்மி மஹரூப்;, ஆர்.எம். அன்வர் ஆகியோர்கள்; உரையாற்றுவதையும் காணலாம். மேலும் புன்னகை இலக்கிய மன்றத்தினால் அதன் தலைவர் கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி மற்றும் பேனா சஞ்சிகை ஆசிரியர் ஜே. பிரோஸ்கான் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.
– மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. –
நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,… … என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).