05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,
டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.
தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்
05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,
டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.
தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்
தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று. ‘நாலு பேரும், பதினைந்து கதைகளும்’ என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற ‘கோணல்கள்’ என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள ‘கவுண்டர் கிளப்’ என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.