– ஏப்ரல் 30, 2013 – கடந்த கிழமை கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் அரங்கில் நடைபெற்றது. தமிழ்க் கலைக் கல்விச்சாலை நிகழ்த்திய இரண்டாவது ஆண்டு பரிசளிப்பு விழா இதுவாகும். நானூறுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். மங்கல விளக்கை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட திரு நக்கீரன், திருமதி சரோசினி தங்கவேலு ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண், திருமறை ஓதல் இடம் பெற்றது. விழாவுக்கு வருகை தந்திருந்த அவையோர்களை தருமதி சுவந்தி சங்கர் வரவேற்று உரை நிகழ்தினார். அதனை அடுத்து இந்தோ கனடா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி பத்மினி ஆனந்தின் மாணவர்கள் வரபேற்பு நடனம் ஆடினார்கள்.
நாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல் 5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால் அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள். இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?