செப்தெம்பர் 21 தமிழ்மக்கள் சிங்கள – பவுத்த பேரினவாதி மகிந்த இராசபக்சே அவர்களோடு கணக்குத் தீர்க்கும் நாள்!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கின்றன. செப்தெம்பர் 21 இல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வடக்கில் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ள மக்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது பல விதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதே. மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கட்சியோடு மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவத்தோடும் போட்டியிட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு அரசியல் சக்தியாக களம் இறங்கியுள்ளது. பிந்திக் கிடைத்த செய்தியின் படி கிளிநொச்சியில் ததேகூ இன் ஆதரவாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் இராணுவத்தினர் தடைகளைப் போட்டு  வருகின்றனர் என ததேகூ இன் நாடாளுமன்ற   உறுப்பினர்  சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ததேகூ சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை போன்றோரின் வெற்றிவாய்ப்புக்கள் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களுக்காகப் பரப்புரை  செய்கின்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவம் தடுக்கின்றது.

Continue Reading →

ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் (1)

- வெங்கட் சாமிநாதன் -(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும்  மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய  கட்டுரைக்கு Engma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,

Continue Reading →

இலக்கியமும் இரசனையும் : இலங்கைத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வை

 சு. குணேஸ்வரன் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன. இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும்,  பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம். வாசிப்புக்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன்  ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.

Continue Reading →