சிறுகதை: சவால் !

சிறுகதை: சவால்! - எழுதியவர்: கடல்புத்திரன்‘சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி  என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல்  நேராய் சொல்கிறார்களில்லை. எங்களுக்கோ சொந்த மொழி! இந்த தமிழ் மொழி’யை வேற ஒருத்தன்  கற்க வாறான் என்றால், எங்களையே குழப்புற மொழியாக வைத்திருந்தால்,அவன் தலையை பிய்க்க மாட்டானா? அறிவு ரீதீயாக பொருந்தாமலும் கிடக்கிறதே. ஆனால்,’சாமச்சேவல்’ என்பதில் ஒரு பொருந்தாமையும் இருக்கிறதாகப்படுகிறது. எங்க’பண்டிதர்களை என்ன செய்யலாம்?’என்ற ஆத்திரத்தோடு சைக்கிளை மிதித்தான். இலக்கணச் சுத்தமாக எந்த மொழியைக் கற்கப் போனாலும் இப்படி இடரப் பட வேண்டி இருக்குமோ? மொழியும்,சுதந்திரமும் உடலும் உயிரும் போன்றது, மொழி  எளிமை நல்லதில்லையா?,இந்த  சுதந்திரத்திற்காக தானே போராடுகிறோம்.
  

Continue Reading →

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

- வெங்கட் சாமிநாதன் -ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து  வெளியே வந்துவிட்டனர்.  ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 28: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்’ கவிதையும் மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளும்!

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது 'வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்' கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் பதிவு செய்கின்றேன்.

கவிதை: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

– வ.ந.கிரிதரன்

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது ‘வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்’ கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதியில் பதிவு செய்கின்றேன்.

Continue Reading →