ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆரம்ப காலந்தொட்டுப் பெண்களை விட ஆண்களின் ஆற்றல் மேம்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. இதைக் கருத்திலெடுத்த அன்றைய ஆன்றோரும் சான்றோரும் ஆண்களுக்கென்று புறம் சார்ந்த சில இயல்புகளையும், பெண்களுக்கென்று அகம் சார்ந்த சில இயல்புகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பிரகாரம் ஆண்கள் தம் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தல், பொருளீட்டல், போரிட்டு நாட்டைக் காத்தல், இனத்தைக் காத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதே நேரம் பெண்கள் சமைத்தல், வீட்டு வேலைகளைக் கவனித்தல், கணவர் பிள்ளைகளைப் பேணல், உற்றார் உறவினரை அரவணைத்து விருந்தோம்பல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வண்ணம் பெண்கள் வீட்டோடு இருந்து கொள்ள, ஆண்கள் வெளி உலகத்தோடு பழகத் தொடங்கினர். இது ஆண், பெண் ஆகியோருக்கிடையில் ஏற்ற இறக்கம் உருவாவதற்கு ஏதுவாயிற்று. அக்காலப் பெண்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கப் பழகிக் கொண்டனர். இதைப் பழக்கப் பட்டனர் என்றும் கூறலாம். ஆண் உதவியின்றிப் பெண்களால் தனித்து ஒரு கருமமும் ஆற்ற முடியாதிருந்தது. அவர்களுக்கு உதவத் தகப்பன், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என்று பலர் தயாராயிருந்தனர். ‘பெண் தன்னை அழகுபடுத்தக் கூடாது, தனித்து வீட்டுக்கு வெளியில் வரக் கூடாது, பிற ஆடவர் கண்களில் படக் கூடாது’ என்ற கடும் கட்டுப்பாடுகள் அன்றைய பெண்களை வாட்டி வதைத்தன. அவர்களும் நாளடைவில் இவற்றிற்கு அடிமையாயினர்.

Continue Reading →