திரு விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களின் தெரிவு அல்ல என்பது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவது போன்றது!

திரு. விக்னேஸ்வரன் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை  தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா  ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.

(1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.  ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிய பின்னரும் திரு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்மீதான சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது.

Continue Reading →

புது நூல்: தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!சுப்ரபாரதிமணியன்“எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள்  வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில்  ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு  “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில்  வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக  இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித  நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை

Continue Reading →