சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்பு

சாத்தான் வேதம் ஓதுகிறது! மகிந்த இராசபக்சேயின் வவுனியாப் பேச்சுக்கு ஒரு மறுப்புசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -சனாதிபதி மகிந்த இராசபக்சே பங்கேற்ற வடக்கின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வவுனியா வைரவப் புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார்.

1) பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது; வவுனியா கூட்டத்தில் மfந்த காட்டம் பிரபாகரன் அன்று கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கேட்கின்றனர். புலிகள் இந்த நாட்டைப் பிரிப்பதற்குப் பேசியது போன்று இப்போது கூட்டமைப்பினரும் பேசுகின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று சனாதிபதி மகிந்த இராசபக்சே நேற்று வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.

பதில்: பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது போல சனாதிபதி மகிந்த இராசபக்சே  வடக்குக்குப் போகும் போதெல்லாம் சமத்துவம், சகவாழ்வு பற்றி தேனொழுகப் பேசுகிறார். ஆனால் நடைமுறையில் தமிழ்மக்கள்  இராணுவத்தால் அடிமைகள் போல் அடக்கி ஒடுக்கி  ஆளப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

Continue Reading →

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் பட ஒளிப்பதிவாளர்.- வெங்கட் சாமிநாதன் -செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச்சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். சும்மா படமெடுப்பவர் இல்லை. தன் தொழிலைக் கலையாக உணர்பவர். அத்தகைய பதிவுகள் இவர் பொறுப்பேற்ற படங்களில் நமக்குக் காணக்கிடைக்கும். ஆனாலும், இவர் எப்படி தமிழ்த் திரைப்படத்துக்குள் நுழைந்தார்? நுழைந்து எப்படி காலம் தள்ளுகிறார்? என்ற எண்ணம் என்னில் முழுமையாக முதலிலும், “எப்படியும் எங்காவது தொடங்கத் தானே வேண்டும்?” என்ற சமாதானத்தோடு இப்போதும் உணர்ந்து வருகிறேன். சென்னைக்கு நான் குடி வந்த முதல் வருடத்திலேயே (கி.பி. 2000) செழியன் எனக்கு அறிமுகமானார். யாரோ என்னவோ என்று தான் நான் நினைத்தேன். கணையாழியில் இருந்த கவிஞரும் என்னை ஆத்மார்த்தமாக நேசித்த நண்பருமான  யுகபாரதி என்னை செழியனிடம் அழைத்துச் சென்றார். அந்த முதல் சந்திப்பில் செழியனை மிகவும் கஷ்டப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஸ்டுடியோக்குள் என்னை என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் அவர் ஸ்டுடியோவின் மாடி வெராண்டாவின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, என்னிடம் pose வேண்டாமல், அவர் பாட்டில் குனிந்தும் சாய்ந்தும் தூர நின்றும், கிட்டத்தில் மண்டியிட்டும் என்னென்னவோவெல்லாம் கரணங்கள் செய்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். என்னை முதன் முதலாக இன்னொருவர் முகம் சுளிக்காது பார்க்கக் கூடும் படங்களை எடுத்தவர் செழியன்தான். மற்றதெல்லாம் ஒருமாதிரிதான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்[பது போலவும், எதையோ உற்றுக் கவனிப்பது போலவும், “பரவாயில்லையே நான் கூட இப்படி பார்க்கும்படியான தோற்றத்தில் உள்ள கணங்களை, அவை மறையும் முன் பிடித்து உறைய வைத்துவிட்டாரே. என்று மகிழ்ந்தேன். ஒரு மோசமான subject- ஐ வைத்துக்கொண்டு கூட பரவாயில்லை என்று சொல்லத் தக்க படைப்பைத் தந்துவிடுவது பெரிய விஷயம் தான்.. அப்போ, தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக சேரத் தக்க நிபுணத்துவம் உள்ளவர் தானே, சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் கிடைப்பதை வைத்துத் தானே ஒப்பேத்தவேண்டும்?

Continue Reading →

காஷ்மீர் சிறுகதை: எதிரி

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கைநான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். ‘அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்’ என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.

Continue Reading →