சிறுகதை: மன்னிப்பு!

சிதனா - மலேசியா “ஏய்… என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல…! இதுல என்ன சண்டையும் … உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்…? எதையும்…மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்….அத… அத… அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்…” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 19

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை.  மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த குரலில் கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஜோனும் மாவினும் சிரித்தபடியே தங்கள் வழக்கமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். பூனைப்பகுதியில் கெதர் வழக்கத்திலும் பார்க்க  அந்த பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தார். அங்குள்ள  பரிசோதனை மேசையை முகம் தெரிவது போல் துடைத்து வைத்திருந்தார்கள். கிருமிநாசினி கலந்த நறுமணம் அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (27, 28, 29 *30)

27 கைகொடுத்த இல்லம்

வே.ம.அருச்சுணன் – மலேசியாஇவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!”  மனைவி கடுங்கோபங் கொள்கிறார்.  வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும்  வேண்டாம் என்ற  தீர்க்கமான  முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும்  மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான்! தனது செயலுக்காகக்  கூனிக் குறுகிப்போகிறான்!  நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு  தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது  கண்டும்  காணாததுபோல்  நடந்து  கொண்டது குடும்பத்தார்  எதிர்ப்பார்க்காத  ஒன்று! இதுநாள்  வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது!
   

Continue Reading →