இந்திய சினிமா நூற்றாண்டு விழா!!

B. லெனின்.இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது.

Continue Reading →

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

Continue Reading →

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!

செப்தெம்பர் 15, 2013  / ஊடக அறிக்கை
தேர்தல் முடிவு தமிழ்மக்கள்  அபிவிருத்தி அல்ல தங்கள் மண்ணில்   தன்மானத்தோடு வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை  மகிந்த இராஜபக்சேக்கும்  உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல  வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி இழுத்தடித்து வந்த வட மாகாண சபைத் தேர்தலை வேறு வழியின்றி மகிந்த இராஜபக்சே நடத்துகிறார். இதன் மூலம் தான் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதாகச்  சொன்னாலும் அனைத்துலகச் சமூகத்தின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத்தின் கீழ்  மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரப் பகிர்வு மிகச் சொற்பமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தமிழர்களது கையில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.  அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இத் தேர்தலில் போட்டியிடுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம் இனச் சிக்கலுக்கு தீர்வாக அமையமாட்டாது என்பதில் ததேகூ  தெளிவாக இருக்கிறது.

Continue Reading →