British Tamils Forum Statement: Tamils vote overwhelmingly for self-determination in the NPC election

Sunday 22, 2013
British Tamils Forum (Press Release) : Rajapaksa leaves Britain with disgrace, disgust and failure The Tamil people have once again stated loud and clear their desire to determine their own future by voting for the Tamil National Alliance in overwhelming numbers in the Northern Provincial Council Election. British Tamils Forum calls on the international community to take heed of the message delivered by the voters of the Northern Province; the Tamil national question and Sri Lanka’s perpetual human rights crisis will only ever be resolved by giving the Tamil people the chance to decide for themselves how, and by whom, they wish to be governed.

It is widely agreed that the Northern Provincial Council (NPC) will be a largely ineffectual body, with negligible executive power. Furthermore, in the past few months the Sri Lankan government has openly stated its intention to even further limit the power of the council by stripping it of land and police powers.

Continue Reading →

வீரகேசரி.காம்: பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது இலங்கை தமிழரசுக் கட்சி

2013-09-22 06:40:59 –  வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய…

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்:: யாழ்தேவி நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? எடிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா

யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஓடவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திபார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.    தற்பொழுது கிளிநொச்சிவரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரயில் பற்றித்தான் எத்தனை சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு…

Continue Reading →

ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆரம்ப காலந்தொட்டுப் பெண்களை விட ஆண்களின் ஆற்றல் மேம்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. இதைக் கருத்திலெடுத்த அன்றைய ஆன்றோரும் சான்றோரும் ஆண்களுக்கென்று புறம் சார்ந்த சில இயல்புகளையும், பெண்களுக்கென்று அகம் சார்ந்த சில இயல்புகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பிரகாரம் ஆண்கள் தம் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தல், பொருளீட்டல், போரிட்டு நாட்டைக் காத்தல், இனத்தைக் காத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதே நேரம் பெண்கள் சமைத்தல், வீட்டு வேலைகளைக் கவனித்தல், கணவர் பிள்ளைகளைப் பேணல், உற்றார் உறவினரை அரவணைத்து விருந்தோம்பல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வண்ணம் பெண்கள் வீட்டோடு இருந்து கொள்ள, ஆண்கள் வெளி உலகத்தோடு பழகத் தொடங்கினர். இது ஆண், பெண் ஆகியோருக்கிடையில் ஏற்ற இறக்கம் உருவாவதற்கு ஏதுவாயிற்று. அக்காலப் பெண்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கப் பழகிக் கொண்டனர். இதைப் பழக்கப் பட்டனர் என்றும் கூறலாம். ஆண் உதவியின்றிப் பெண்களால் தனித்து ஒரு கருமமும் ஆற்ற முடியாதிருந்தது. அவர்களுக்கு உதவத் தகப்பன், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என்று பலர் தயாராயிருந்தனர். ‘பெண் தன்னை அழகுபடுத்தக் கூடாது, தனித்து வீட்டுக்கு வெளியில் வரக் கூடாது, பிற ஆடவர் கண்களில் படக் கூடாது’ என்ற கடும் கட்டுப்பாடுகள் அன்றைய பெண்களை வாட்டி வதைத்தன. அவர்களும் நாளடைவில் இவற்றிற்கு அடிமையாயினர்.

Continue Reading →

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!!

B. லெனின்.இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது.

Continue Reading →

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

Continue Reading →

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!

செப்தெம்பர் 15, 2013  / ஊடக அறிக்கை
தேர்தல் முடிவு தமிழ்மக்கள்  அபிவிருத்தி அல்ல தங்கள் மண்ணில்   தன்மானத்தோடு வாழ்வதையே விரும்புகிறார்கள் என்பதை  மகிந்த இராஜபக்சேக்கும்  உலகத்துக்கும் எடுத்துச் சொல்ல  வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி இழுத்தடித்து வந்த வட மாகாண சபைத் தேர்தலை வேறு வழியின்றி மகிந்த இராஜபக்சே நடத்துகிறார். இதன் மூலம் தான் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதாகச்  சொன்னாலும் அனைத்துலகச் சமூகத்தின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தல் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத்தின் கீழ்  மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள அதிகாரப் பகிர்வு மிகச் சொற்பமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தமிழர்களது கையில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.  அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இத் தேர்தலில் போட்டியிடுகிறது. 13 ஆவது சட்ட திருத்தம் இனச் சிக்கலுக்கு தீர்வாக அமையமாட்டாது என்பதில் ததேகூ  தெளிவாக இருக்கிறது.

Continue Reading →

‘காற்றுவெளி’ வெளிவந்து விட்டது!

வணக்க்ம. காற்றுவெளி ஐப்பசி மாத இதழுக்கான தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்.(கவிதை,சிறுகதை,கட்டுரை(அரசியல் தவிர்த்து),நூல் விமர்சனம்,மருத்துவக் குறிப்புக்கள்,குறும்பட செய்திகள்). காற்றுவெளி பற்றிய தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள். பிரசுரிக்கப்படும். உங்கள்…

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: தமிழகத்தில் வெளியாகும் தளம்

படித்தோம்  சொல்கின்றோம்: தமிழகத்தில் வெளியாகும் தளம்‘முரண்படுதலுக்கான  காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள்  வலுவானவை’ என்ற கருத்தை  முன்னிருத்தி தமிழ்நாட்டிலிருந்து இந்த (2013) ஆண்டு  முதல்  வெளியாகும் தளம் கலை, இலக்கிய காலாண்டிதழின்;  ஏப்ரில்,  மே,  ஜூன்  இதழ்  சமீபத்தில் கிடைத்தது. நாடகச்சிறப்பிதழாக  வந்துள்ள இவ்விதழ்  தமிழ்த்தூது  தனிநாயகம்  அடிகளார்  பற்றிய  ஆக்கத்தையும்  பதிவுசெய்து அன்னாரின் நூற்றாண்டு  காலத்தையும்  மறக்காமல் நினைவுபடுத்தியுள்ளது. தளம் இதழை  உலகெங்கும்  வாழும் கலை, இலக்கிய,  நாடக,  திரைப்படச்சுவைஞர்கள்  படிக்கத்தக்கதாக  தற்பொழுது இணையத்திலும் பார்க்கமுடிகிறது. தளம் மூன்றாவது  இதழும்  வெளியாகியுள்ளது.

Continue Reading →