ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள. அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.
பாரிஸ் பெரு நகர மையத்தினுள் அமைந்திருக்கும் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களை பார்த்தவுடன் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் நான் சென்றிருந்தது குடும்ப கொண்டாட்டத்திற்கோ, ஆண்டு விழாவுக்கோ, மதம் சார்ந்த நிகழ்வுக்கோ அல்ல. புலம்பெயர் வாழ்வில் எமது அடுத்த தலைமுறையினர்க்கு நாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பிரான்ஸ் சிலம்புச் சங்கம் ஏற்பாட்டில் 19.01.2014 அன்று நடாத்தப்பட்ட எட்டாவது புலம்பெயர் தமிழர் திருநாள் நிகழ்வு. இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக, புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க வெளி முற்றத்தில் அழகான கோலப் பின்னணியில் அடுப்பு வைத்து விறகிட்டு தீ மூட்டி மட்பானையில் பொங்கல் நிகழ்வு தொடங்க, குழுமியிருந்த கலைஞர்கள் பறையடித்து முழங்க ஆடல் பாடலாக வெளியரங்கம் களைகட்டியது. பாரீஸ் பெருநகர மையத்தில் முதற்தடவையாக நடந்த நிகழ்வாகையால் பெரும்பான்மையோருக்குப் இது புதுமையானதாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஒளிப்படமெடுத்தபடி மலர்ந்த முகத்துடன் வருகைதந்தோர் காணப்பட்டனர்.
இந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.
“மானுடப் பிரேமையே இலக்கியத்தின் ஆன்மா” என அறைகூவிய எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசெயற்பாட்டாளருமான அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்: 17-02-2014 திங்கள் கிழமை பி. ப.…
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்கு செய்துள்ள அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி – எதிர்வரும் (பெப்ரவரி) 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல்…
[ ‘பிரேம்ஜி எழுத்துலகில் பொன்னாண்டு நிறைவு’ என்னும் நூலினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1988இல் வெளியிட்டது. இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகவிருந்தவர் மறைந்த எழுத்தாளர் என்.சோமகாந்தன். இத்தொகுப்புக்காக, தான் பிரேம்ஜி பற்றி எழுதிய கட்டுரையினை எழுத்தாளர் பிரேம்ஜியின் மறைவினையொட்டிப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். – பதிவுகள் ]
1950களின் பிற்பகுதி. எனது 20களுக்குள் பிரவேசம். தமிழ் வெகுஜன ஊடகத்துறையைப் பரிச்சயப் படுத்திக்கொள்ளும் காலம். சுதந்திரன் பத்திரிகையின் வளர்மதிப் பக்கத்தில் பெரியவர் துரைசாமி ம.த. லோரன்ஸ் ஆகியோரின் கணிப்பீனூடாக ஆக்கங்கள் அப்பக்கத்தில் வெளிவரத் தொடங்கின. மூத்த முன்னோடிப் பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வழிகாட்டலில் அப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில், இலங்கை தமிழ் அரசியற்துறையில் முக்கியஸ்தராக விளங்கப்போகும் இரத்தின சபாபதி (இணுவை மாறன்) அங்கு பணிபுரிந்தார். இவர்களுடன் இன்னுமொருவரும் அமைதியாக இருந்து எழுதிக்கொண்டிருப்பார். யார் அவர்? சிரிக்க மாட்டார். பார்வையிலேயே சீரியஸ் ஆன பிரமுகராக இருந்தார். விசாரித்தபொழுது, புதிய பார்வையில் பாரதிதாசனை எடைபோடும் எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்றார்கள். அப்பொழுதுதான் முதல் அறிமுகம். ஆயினும் அந்நியோன்யம் கிடையாது.
– பதிவுகள் நவம்பர் 2009 இதழ் 119இல் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு பற்றி வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் மறைவையொட்டி, அவர் நினைவாக மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –
பிரேம்ஜி ஞானசுந்தரம் இடதுசாரிக்கருத்துகளால் கவரப்பட்ட ஒரு முற்போக்காளர். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தவர். 1954 தொடக்கம் அதன் செயலாளராக இருந்துவருகின்றார். அவர் 1950களில் இருந்து எழுதி வந்த கட்டுரைகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு நூல் கடந்த 27.09.2009 மாலை ‘ஸ்காபுரோ விலேச்’ சனசமூக நிலையத்தில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை திரு. வி.என். மதியழகன் தொகுத்து நெறிப்படுத்தினார். செல்வி ஆதிரை விமலநாதன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் இசைத்தார். தொடர்ந்து த.சிவபாலு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமையுரையாற்றினார் அதிபர் கனகசபாபதி அவர்கள். தலைமையுரையில் ‘பிரேம்ஜீ அவர்கள் இலைமறை காயாக இருந்து செயலாற்றிய ஒருவர்; ஆரம்பத்திலவர் பரமேஸ்வராக்கல்லூரியில் கற்றபோது அவரைப் பரீட்சைக்குத்தோற்றுமாறு அவரது ஆசிரியர் கேட்டபோது அவர் நான் பரீட்டைஎடுக்கவரவில்லை அறிவுக்குப் படிக்கவே வந்தேன் என்றபோது அப்படியானால் இது உனக்கு உகந்த இடமல்ல என்று பாடசாலையில் இருந்துவெளியேற்றப்பட்டபோது, அவரது பெற்றோரும் அதனை ஒரு சவாலாக எடுத்து அவரை வேறு பாடசாலையில் சேர்ந்து படிக்கவைத்துள்ளனர் என்றால் பிரேம்ஜிக்குப் பெற்றோர் தந்த ஒத்துழைப்பு எத்தகையது என்பது எனக்க வியப்பைத்தருகின்றது. அது மட்டுமல்லாது கொழும்பில் நாமக்கல் கவிஞரைக் கண்டு நான் ஆங்கிலத்தை அல்ல தமிழைத்தான் கற்க விரும்புகின்றேன் என்று கூறி அவருடைய அனுமதியைப் பெற்று இந்தியாவிற்குச் சென்று தமிழைப் படித்துள்ளார் என்றால் அவரது மொழிப்பற்று, தேசப்பற்று என்பன பற்றிச் சொல்லத்தேவையில்லை. சென்னையில் வி.க. வ.ரா. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி சுவாமிநாத சர்மாவின் ஆலோசனைப்படி கொம்யூனிசக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இயங்கி வருவதோடு மட்டுமன்றி பல்வேறுபட்டி பிரிவினரையும் இணைத்துப் பாலமாகச் செயற்பட்டவர். சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டி பல வெளிநாட்டு எழுத்தாளர்களும் இணைத்து பெரிய ஒரு மகாநாட்டைக் கூட்டியவர்’ என்று அவரைப்பற்றிய சிறப்புக்களை எடுத்துரைத்தார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் -வி.க. வா.ரா- சுவாமிநாத சர்மா – குயிலன், – பேராசிரியர் ராமகிருஷ்ணன் – தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம் திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி – மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
காலம்: (09.02.2014) ஞாயிறு பி.ப 3.00 மணி
இடம்: திருமறைக்கலாமன்றம்,
கலைத்துளது அழகியற் கல்லூரி
இல 128,டேவிற் வீதி யாழ்ப்பாணம்.
மகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார் முறையிடுகிறார்கள்? அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்? முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ + இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்வில் எல்எல்ஆர்சி அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார். இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள் (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார். மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார். முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.