நூல் அறிமுகம்: ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –

நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: அளவெட்டி ஆசிரமக்குடிலில் சந்தித்த அ.செ.முருகானந்தன் தமது மரணச்செய்தியை பத்திரிகையில் பார்த்த பாக்கியவான்!

எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்முருகபூபதிஅளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் – அண்ணா – நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். – என்றார். தம்பி – அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன்.  ஆனால் அவரை இன்று வரையில்  நான்  நேரில் பார்த்தது கிடையாது.ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை  பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம்  இல்லை. என்றேன். இன்றைய தலைமுறை வாசகர்கள் கேட்கலாம் -அது என்ன சேரன் – சோழன்?  என்று. சங்ககாலத்தில்  வாழ்ந்த   மூவேந்தர்கள் பாண்டியன் – சேரன் – சோழன். ஆனால் நவீன உலகத்தில்  ஈழத்தில்  அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர்     சேரன் – சோழன் –  பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை – இனியாள். சேரனும், பாண்டியனும் , மகள் அவ்வையும்  தற்பொழுது கனடாவில். சோழன் அமெரிக்காவில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில். இதில் மற்றுமொரு  தகவலும் இருக்கிறது. தற்காலத்தில் பேசுபொருளாக இருக்கும் சோவியத்தின் உக்ரேயினைச்சேர்ந்த பெண்ணைத்தான் பாண்டியன் மணம்  முடித்தார். அவர்களின் மூத்த புதல்வன் பெயர் எல்லாளன். எல்லாளனும் பெற்றோர்களுடன் கனடாவில். மகாகவியை நான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம்  எனக்கு   கிட்டவில்லை. நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் மறைந்தார். எனினும் மகாகவியின் பிள்ளைகளுடன் எனக்கு உறவும் உரையாடலும் இருக்கிறது.

Continue Reading →