எகிப்தில் சில நாட்கள் -08: மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்

எகிப்தில் சில நாட்கள் -08: மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம். விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது. நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாக அகதா கிறிஸ்டியின் நைல் நதியில் மரணம் நாவல் படமாகியது (Death on the Nile) இந்தப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நினைவிலிருந்தாலும் அதில்வரும் நைல் நதிப்பயணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. முக்கிய நதிகளில் தெற்கேயிருந்து வடக்கு ஓடுவது நைல் நதி மட்டுமே. ஆதிகாலத்தில் இருந்தே நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. நைல் நதியில் தெற்கு நோக்கி, அதாவது சூடான் பக்கமாக செல்லும் போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாய்மரத்தை விரித்தால் படகு போய்க் கொண்டேயிருக்கும்.அதே போல் வடக்கு நோக்கி நைல்நதியில் செல்லும்போது , பாயை இறக்கிவிட்டால் அந்த நீரோட்டத்தில் அலக்சாண்ரியாவுக்கு வந்து மத்திய தரைக்கடலை அடைந்து விடலாம். இவ்விதமாக காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை என்பது வரலாற்றாசிரியர்களின கருத்து. எகிப்தை ஆயிரம் வருடங்கள் ஆண்டவர்களான கிரேக்கர்,ரோமர் முதலானோர் பலமான கப்பல்ப் படையை கொண்டவர்களாகவும் சிறந்த கப்பலோட்டிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள்.

Continue Reading →

தமிழகம்: ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!

தமிழகம்: 'இலக்கு' என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம்!வணக்கம், ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாத கூட்டம், 14.03.2014 அன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது. தலைமை : பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள்;  சிறப்புரை: திரு லேனா. தமிழ்வாணன்.. விருதாளர்: தடகள வீராங்கனை செல்வி ஆ. இந்து.. அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.. தாங்களும், தங்கள் இல்லத்து இளைய தலைமுறையினரும், கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம் ..

Continue Reading →

சிட்னி தமிழ் நிகழ்வுகள்: விழிப்பு ஒன்று கூடல்

சிட்னி தமிழ் நிகழ்வுகள்: விழிப்பு ஒன்று கூடல்வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது.  ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.

Continue Reading →