என்னோடு வந்த கவிதைகள்(1)

“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
 சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
 சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” – பாரதி.-

- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை`  அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம்  முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.

Continue Reading →

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” – இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்!

“களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள்,  இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது.  குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை wetamizhar@live.in  எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.    

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – ஆஸ்கர் விருது – திரையிடல் – நிகழ்ச்சி நிரல்:

balumahendraபாலு மகேந்திரா அவர்களின் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்கர் பரிந்துரை திரைப்படங்களின் திரையிடல் எதிர்வரும் சனி (08-03-2014) மற்றும் ஞாயிறு (09-03-2014) நடைபெறும். நாள்: 08-03-2014, 09-03-2014 (சனி மற்றும் ஞாயிறு) – அனுமதி இலவசம், அனைவரும் வருக. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில், தொடர்புக்கு: 9578780400. நேரம்: காலை 10 மணி முதல், 08-03-2014 – சனிக்கிழமை.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் விமர்சனம்

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் - விமர்சனம் - கல்பனாகடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் ‘அட!!’  என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் – பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை  உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.

Continue Reading →