அலைகள்.காம்: டென்மார்க் பொருளியலாளர் அலன் தர்மன் புதிய பதவிக்கு தேர்வு..

அலன் தர்மன்டென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி…  நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.

Continue Reading →

தமிழ் சினிமாவில் பெண்கள்: கே..பாரதி எழுதிய நூல் (வெளியீடு – விகடன் பிரசுரம்) – ஒரு சிறு அறிமுகம்

மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.

கே.பாரதிLatha Ramakrishnanபெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில்  முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.

Continue Reading →