அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03- 2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை – இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும். இலக்கிய கருத்தரங்கு – தமிழ் தட்டச்சு மற்றும் விக்கிப்பீடியா செயல் விளக்கம் – நூல் அறிமுகம் – மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் மற்றும் அன்பர்கள் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்கள் – கலை, இலக்கிய சுவைஞர்கள் – ஊடகவியலாளர்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
இலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும் நூல்கள்:
* மருதூர்க்கனி கவிதைகள்
* சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும்
* என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.
நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.