வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால் அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மன நிலையை தமிழர்க்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடைக்கின்ற இந்த மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும் இலங்கையின் அரசியல் கற்பித்து வைத்துள்ளது. ஒரு பெருந் தத்துவம் மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது. ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்நோக்குகின்ற இரு இனங்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் மதங்களுக்கு மோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு, அதனை அறிவுசார் தளத்தில் அணுகவேண்டும். வடபாகத்தில் கிடைக்கின்ற பௌத்த எச்சங்களையும் சிங்களவர்களும், தமிழர்களும் ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர்தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல் சரியான வரலாற்று – பண்பாட்டு புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தொல்பொருட்களை கண்டுபிடித்தாலும் உடனேயே இது இத்தனையாம் நூற்றாண்டுக்குரியது, இந்த மன்னருக்குரியது, இந்த சமயத்துக்குரியது, இந்த மொழிக்குரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும். ஒழுங்கான அகழ்வாய்வுகள் துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது முடிவுகளாக செய்திகள் அறிவிக்கப்படுகின்றமை மேலும் இன முரண்பாட்டுக்கூர்மையை அதிகப்படுத்தும்.
மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத
கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல் வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல் வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கவிதை: ஒரு கவிஞனின் (மனிதனின்) பெருங்கவலை!
– வ.ந.கிரிதரன் –
ஒரு சாதாரண ‘காலக்சி’யினோரத்தே – சுழலும்
ஒரு சாதாரணச் சூரிய மண்டலத்தே – சுழலும்
ஒரு சாதாரணக் கோளத்தில் – வாழும்
ஒரு சாதாரணக் கவிஞனொருவனுக்கு- அல்லது
ஒரு சாதாரண மனிதனொருவனுக்கு
ஒரு பெருங்கவலை. அது என்ன?
எமது ஒன்று கூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை 14.06.2014 அன்று மலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. இதில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 15-06-2012, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை.
நண்பர்களே, புனே திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நண்பர் திவாகர் இயக்கிய இரண்டு குறும்படங்கள் சென்னையில் எதிர்வரும் ஞாயிறு திரையிடப்படவிருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வில் திரளான நண்பர்களும் கலந்துக்கொண்டு திரையிடலை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
– சிறுவர் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்காற்றி வந்த எழுத்தாளர் வாண்டுமாமா (இயற்பெயர்: வி.கிருஷ்ணமூர்த்தி) இன்று ஜூன் 12,014 அன்று தனது தோண்ணூற்றியொரு வயதில் காலமானார். அவரது மறைவினையொட்டி இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள். –
வாண்டுமாமா.
இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்… பேசும் கிளியும்… பலே பாலுவும்… உங்கள் நினைவில் மின்னினால்… சபாஷ்… உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்! கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்? சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது…
சிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக , குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு International Zentrum – Flachs Markt– 15> 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை ரவித்துப்பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர்.