அன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

book_anpulla5.jpg - 10.71 Kbண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சப்ரா அக்ரம், தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவியாவார். இவரது கன்னிக் கவிதைத் தொகுதி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது. 52 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சிறியதும் பெரியதுமான 42 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவர் பாடசாலைமட்ட கவிதைப் போட்டிகளிலும், மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நோக்குமிடத்து சிறு வயது தொடக்கம் முதுமை வரை பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் படும் துன்பங்கள் ஏராளம். குடும்ப வாழ்க்கைக்குள்ளும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக்கூடிய வலிமை பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்ததல்ல. தொடர் போராட்டங்களினால் கற்றுக்கொண்ட பாடங்களாக அவை அமைந்துவிடுகின்றன. சிறந்த மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஒரு பெண் பல பரிணாமங்களைப் பெறும்போதும் தனக்கேயுரிய தனித்துவத்தில் அவள் தலைசிறந்து விளங்குகின்றாள். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் படிக்கல்லாகத் திகழ்கின்றாள்.

Continue Reading →

கருணாகரன் கவிதைகள்!

1. கொலை

karunakaran_55.jpg - 6.13 Kb

இன்று முழுதும் என்னைக் கொன்று கொண்டிருந்தேன்
மற்றவர்கள் என்னைக் கொல்வதையும் விட
நானே என்னைக் கொல்வது சுலபமாக இருக்கலாம்
அது நல்லதும் கூட என்றெண்ணினேன்
ஆனால் அது மிகக் கடினமாக இருந்தது.

Continue Reading →

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்வு!

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். 28/03/2015 சனிக்கிழமை பி.ப.3:00 மணி தொடக்கம் மாலை 9:00 மணி வரை அன்புடன் லக்ஷ்மி…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 78: ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தின் முதல் தமிழ் நாவலெது? ‘வித்தியாசப்படும் வித்தியாசங்களா? அல்லது மண்ணின் குரலா’?

1_manninkural_original59.jpg - 35.02 Kbமண்ணின் குரல் (நாவல் தொகுப்பு)ஞானம் புலம்பெயர் இலக்கியத்தொகுப்பின்  ‘ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம்’ என்னும் முன்னுரையில் ஞானம் இதழின் பிரதம ஆசிரியரான ஞானசேகரன் புலம்பெயர் தேசத்தின் முதலாவது நாவ;ல் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த முதலாவது நாவல் என்ற வகையில் 1987இல் வெளிவந்த பார்த்திபனின் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’  என்ற நாவல் அமைகிறது.”

ஆனால் பார்த்திபனின் நாவல் 4.1.1987ற்கு முன்னர் வெளிவந்திருந்தால் மட்டுமே மேற்படி கூற்று பொருந்தும். ஏனெனில் 4.1.1987 அன்று ‘டொராண்டோ’, கனடாவில் ‘மண்ணின் குரல்’ என்னும் என்ற எனது நாவலொன்று றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேற்படி ‘மண்ணின் குரல்’ நாவல் 1984/1985 காலகட்டத்தில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக 9 அத்தியாயங்கள் வரையில் வெளிவந்து. பின்னர் இறுதி அத்தியாயமான பத்தாவது அத்தியாயம் சேர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்தது. நூலாக வெளிவந்தபொழுது ‘புரட்சிப்பாதை’யில் வெளியான கட்டுரைகள் இரண்டு, கவிதைகள் 8 ஆகியவற்றினையும் உள்ளடக்கி, ஒரு சிறு தொகுப்பாக வெளிவந்தது. [1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக மண்ணின் குரல் என்றொரு எனது நான்கு நாவல்களை உள்ளடக்கிய தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. அது வேறு ; இது வேறு. ஆனால் இந்த மண்ணின் குரல் நாவலானது அத்தொகுப்பிலும் உள்ளது.] மேற்படி ‘மண்ணின் குரல்’ நூலுக்கான அட்டைப்படத்தை கட்டடக்கலைஞர் பாலேந்திரா வரைந்திருந்தார். அதனையே இங்கு இடது பக்கத்தில் முதலாவதாகக் காண்கின்றீர்கள் (தமிழகத்தில் வெளியான மண்ணின் குரல் தொகுப்புக்கு இதே அட்டைப்படத்தையே அடிப்படையாகக்கொண்டு, வேறு ஓவியரொருவரால் வரையப்பட்ட ஓவியத்தைக் குமரன் பப்ளிஷர்ஸ் பயன்படுத்தியிருந்தது. அதனை இரண்டாவதாகக்காண்கின்றீர்கள்.)

Continue Reading →

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம். ஆவணமாகிவிட்ட அரசியல் இதழொன்றின் எளிய ஆரம்பங்கள்.

1_vijaya-bhaskaran5.jpg - 27.90 Kb- வெங்கட் சாமிநாதன் -சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும்  கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான்.  இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த  பெரும் சவால்கள். அவை தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக இருந்தன.  இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார்.  நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த, ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற, தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும்  அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்தவர் நேரு.

Continue Reading →

‘வாசிப்பும், யோசிப்பும் 77: டொராண்டோ’வில் நடைபெற்ற ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப்புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ் வெளியீட்டு விழா பற்றிய சிறு குறிப்பு!

ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்' சிறப்பிதழ் அறிமுக விழாஇன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான ‘ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா ‘டொராண்டோ’வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘பனியும், பனையும்’ சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

Continue Reading →

சிறுகதை: மேலதிகாரி – ஒரு கணித விற்பன்னர்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.

பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர்’ ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.

Continue Reading →

படைப்பாளி ராஜாஜி ராஜகோபாலனின் ‘உபயகாரன்’ சிறுகதை பற்றிய எனது பார்வை!

ராஜாஜி ராஜகோபாலன்முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவற்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் ‘ஊறப்போட்ட’ கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.  எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா-2015

அதிபர் கனகசபாபதி கவிஞர் கந்தவனம்கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.

‘முதற்கண் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அமரர் அதிபர் பொ, கனகசபாபதி அவர்களுக்கான தேகாந்த நிலை விருதை ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் அவரது குடும்பத்தினரான மணிவண்ணன், மணிமொழி, மணிவிழி ஆகியோரையும், இன்றைய விழா நாயகனான கவிநாயகர். வி. கந்தவனம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்ததையிட்டு, அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசீய கீதம் ஆகியன இசைத்த செல்விகள் சங்கவி முகுந்தன், சாம்பவி முகுந்தன் அவர்களையும் அமரர் அதிபர் கனகசபாபதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவம் தந்த கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களையும் வருக வருக என வரவேற்கின்றேன். அடுத்து தலைவர் உரையாற்றவிருக்கும் எமது இணையத் தலைவர் கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி, தகமைச்சான்றுரை ஆற்றவிருக்கும் பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர் அவர்களையும், மற்றும் பிரதம விருந்தினரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

Continue Reading →

Tribune (Sri Lanka), Oct. 16, 1965 : Valluvar-1! What is unique? Three sided genius.

[Our previous series of articles on valluvar had created a great deal of interest among our readers, and we now publish a series of three articles by A.N.Kandasamy on what he regards as unique in Valluvar. The second and third installments of this series will be publsihed in the coming weeks. – EDITOR, Tribune]

By A.N.Kandasamy The final impression that scholars and writers who write on Valluvar leave in the minds of their readers is that he is either an outstanding moralist of the stoic-philosopher type or a didactic poet on ethics. But to me this is a grossly wrong estimation of one of the great thinkers of the world, a secular philosopher with a unique outlook in many ways, not just an author of a few hundreds of ethical aphorisms, but how is it that this well-unintentioned, in fact adolatary under-estimation has gained such currency among writers and readers as well? Perhaps the fact that the early translators of Kural were Christian missionaries like the Rev.G.U.Pope and Rev.W.H.Drew has something to do with it.

It is the opening section of Thirukural ARAM  or VIRTUE («Èõ) that has a appealed to these gentlemen as the cream of Valluvar’s thought. The Second and Third sections deal with Politics and Love respectively and the vocation of these translators must have  had a limiting influence on their appreciation of these sections.

Continue Reading →