ஜூன் 2015 கவிதைகள்: மேலும் சில…

கவிதை வாசிப்போம் வாருங்கள்!க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!

இயற்கையின் வெற்றி

விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!

பொருளாதாரச் சிந்தனை

கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!

Continue Reading →

வாசகர் கடிதங்கள் சில.

வாசகர் கடிதங்கள் சில.Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com> wrote:
Subject: RE: நஸ்ரியா
Date: Sunday, June 21, 2015, 10:37 AM

நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.

நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?

தமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்

Continue Reading →

ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா!

ஜூன் 21 தந்தையர் தினச்சிறப்புக்கவிதை:  அப்பா!

கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

படித்தோம் சொல்கின்றோம்: புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில் எம்மை   நாம் சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.ஒருவர்   மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம்,   ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை   மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது   கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை   என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.  காந்தியடிகளின் நாட்குறிப்பு,   நேரு   சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு   எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும்   நிகழும் சம்பவங்களை   குறித்து வைப்பதற்காக அறிமுகமான  Diary ( Daily record of event)   தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும்   அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி  பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில்    ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும்  அறிவோம்.

ஏற்கனவே   தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டிருக்கும் பெர்லினில்   வதியும் கருணாகரமூர்த்தியின் மற்றுமொரு வரவு அனந்தியின்  டயறி.  இதனை  அவர் 16  ஆண்டுகளுக்கு  முன்னரே எழுதத்தொடங்கி , அவரது கணினியில் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, அந்தக்குறிப்புகளை   இழந்துவிட்ட சோகத்தில் நெடுநாட்கள்   இருந்தபொழுது,   டயறிக்குறிப்புகளின் பாங்கில் வெளியான   சில ஆங்கில தமிழ் நாவல்களைப் படித்ததும் மீண்டும் உற்சாகம்   கரைபுரண்டு ஓடவும் இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலில் காலச்சுவடு ஸ்தாபகர் சுந்தரராமசாமியையும்  தமது என்னுரையில் நினைவுபடுத்தியுள்ளார். சு.ரா.  என இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட சுந்தர ராமசாமியின்   ஜே.ஜே. சில குறிப்புகள்   மிகவும்  முக்கியமான படைப்பு.    ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஒரு எழுத்தாளனைப்பற்றியது. ஆனால், அவனுடைய எழுத்துக்களை   நாம்   பார்த்திருக்கவில்லை.   “தன்   உள்ளொளியை  காண  எழுத்தை ஆண்டவன்   அவன் ” என்றும்  – அற்பாயுளிலேயே   மறைந்துவிட்டான் எனவும்  சொல்லியவாறு   சு.ரா.வே   கற்பனை செய்துகொண்டு எழுதிய புதினம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

Continue Reading →

‘டொராண்டோ’: மு.நித்தியானந்தனின் கூலித் தமிழ் நூல் வெளியீடு, அறிமுகம். விமர்சன ஆய்வரங்கு

உரையாற்றுவோர்மணி வேலுப்பிள்ளைஷான சந்திரசேகர்பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன்முனைவர். ந.சுப்பிரமணியன்முனைவர் பார்வதி கந்தசாமி காலம்: 20 – 06 – 2015 சனிக்கிழமைநேரம்: மாலை 4.30 மணி…இடம்: மல்வன் சென்டர்Malvern…

Continue Reading →

கூடு – மூன்றாவது இதழ் வெளிவந்துவிட்டது..

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழான கூடுவின் மூன்றாவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இதழில் கவிஞர், இயக்குனர் லீனா மனிகேமலையின் சிறுகதை, தறியுடன் நாவல்…

Continue Reading →

லண்டனில் சர்வலோகேஸ்வரி குமாரராஜாவின் 70ஆவது பிறந்ததினவிழாவும் பாராட்டும்

லண்டனில் சர்வலோகேஸ்வரி குமாரராஜாவின் 70ஆவது பிறந்ததினவிழாவும் பாராட்டும் ‘முதியவர்கள் பலம் குன்றியவர்களாகக் கருதப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில், லண்டனில் ‘முதியோர் கலைமாலை’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து முதியவர்களை ஒன்றுசேர்த்து, ஊக்கப்படுத்தி கலை நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்குபற்றச் செய்த பெருமை சர்வலோகேஸ்வரி அவர்களையே சாரும். நாட்டியத்துறையில் ஆளுமைகொண்ட சர்வலோகேஸ்வரியின் 70ஆவது வயது நீண்டதாக இருக்கலாம். ஆனால், அவரது சமூகசேவைகளும் மிக நீண்டதாக அமைந்துள்ளது. தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப் பண்போடு நேசித்து, தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆங்கில மொழியைக் கையாள்வதில் அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயாப்பாளராக வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பணிபுரிந்தமையை பாராட்டியதோடு, இவரின் பல்வேறு சேவையைப் பாராட்டி, 2014 ஆம் ஆண்டு கிங்ஸ்ரன் மேயயரால் இவருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையையும் பெருமையுடன் நினைவிருத்த வேண்டும்’ என்று கடந்த சனிக்கிழமை 6ம் திகதி சட்டன் ‘தோமஸ் வோல் சென்ரரில்’ இடம்பெற்ற சர்வலோகேஸ்வரியின் 70ஆவது பிறந்ததின விழாவின்போது திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

    ‘சட்டன் மூத்தோர் வலுவூட்டல் திட்ட அமைப்பில்’ செயற்படும்போது எந்தவொரு விடயத்தையும் முன்னின்று செயற்படுவதில் காட்டும் ஊக்கமும், துடிப்பான செயற்பாடும், திறம்பட நடத்தக்கூடிய வல்லமையும் சர்வலோகேஸ்வரிக்;;கென்ற ஒரு சிறப்பான அம்சமாகும். சட்டன் தமிழ் நலன்புரிச் சங்கத்தோடு ஆரம்பித்த முதியோருக்கான அவரது சமூக சேவைகள் சட்டன், மேட்டன், நோபிற்றன், கிங்ஸ்ரன், ஈஸ்ற்ஹாம் எனப் பல்வேறு பகுதிகளிலும் விரிந்து கிடப்பது அவரது சமூகசேவைக்குச் சான்றாகும். இன்னும் அவரது சேவைகள் தொடர வேண்டும்!’ என டாக்டர் பகீரதன் அமிர்தலிங்கம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 102: எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார் “நேற்று ஜெயமோகன் உரையாற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். வழமைபோல ‘நேரத்திற்குச் சென்றதால்’ அவரின் உரையைத் தவறவிட்டிருந்தேன். ஆனால் கேள்வி பதில்களைக் கேட்க முடிந்தது. கவிதைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பாரதி, கு.ப,ரா, வானம்பாடி எனத் தொடர்ந்து வந்து நீட்சித்த பேச்சில் ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை. தன்னைக் கவனம் கோரும் இன்றைய கவிஞர்களில் தமிழகம் சார்ந்த கவிஞர்களைத் தவிர எந்தக் கவிஞர்களும் இல்லை என்பதற்கப்பால், ஒரு பெண் கவிஞர் கூட அவருக்கு நினைவில் வரவில்லை..”

பொதுவான சந்திப்பொன்றில் எழுத்தாளர் உடனடியாக நினைவில் இருப்பவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கலாம். அதற்காக அவரைக் குற்றஞ்சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது ஆக்கங்களில் அவ்விதம் அவர் இருட்டடிப்பு செய்திருந்தால் அது விவாதத்துக்குரியது.

ஜெயமோகனது சந்திப்பு பற்றி யோகன் கண்ணமுத்து தனது முகப்பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 101: முகநூலிலிருந்து…: தமிழினி ஜெயக்குமாரனின் ‘நஸ்ரியா’

வாசிப்பும், யோசிப்பும் 100: முகநூலிலிருந்து...: தமிழினி ஜெயக்குமாரனின் 'நஸ்ரியா'தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான  ‘நஸ்ரியா’ என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும்  பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க  படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:

Continue Reading →

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்

book_ammavinrakasiyam57.jpg - 12.04 Kbவாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

Continue Reading →