கவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.

Continue Reading →

சிறுகதை: போரே! நீ போய் விடு!

– வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. –

1.

சிறுகதை:  போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் … கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்… மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்… இம்மண்ணினழகே தனிதான்.

மழையுடன் போட்டி போட்டபடி ‘ஓ..வ்..வ்..’வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.

Continue Reading →

சிறுகதை: போரே! நீ போய் விடு!

– வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. –

1.

சிறுகதை:  போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் … கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்… மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்… இம்மண்ணினழகே தனிதான்.

மழையுடன் போட்டி போட்டபடி ‘ஓ..வ்..வ்..’வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும்: 120 அம்பர்தோ எகோவா? அம்பர்தோ ஈகோவா?’ வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்; தமிழகத்தில் பாலன் தோழரின் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூல் வெளியீடு!; இலங்கைத்தமிழ் எழுத்தாளர் பாலா குமாரசாமி பற்றி ‘அமுதசுரபி’யில் ‘

அம்பர்தோ எகோபிரபல மொழியியல் அறிஞரும், எழுத்தாளருமான அம்பர்தோ எகோவுடனான நேர்காணல்கள் அடங்கிய கைக்கடக்கமான நூலொன்றினை அண்மையில் வாசித்தேன். மொழிபெயர்த்திருப்பவர் ரஃபேல். அந்நேர்காணல்களில் தன் வாழ்வு பற்றி, விருப்பு வெறுப்பு பற்றி, தன் இலக்கிய முயற்சிகள், அவற்றுக்கான தூண்டுதல்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து அம்பர்த்தோ எகோ கூறியிருக்கின்றார். மூலக்கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. ஆனால் நூலின் நடையிலிருந்து , மொழியிலிருந்து தரமானதொரு மொழிபெயர்ப்பாகவே தென்படுகின்றது. இதில் எம்பர்தோ எகோவுடனான புனைவுக்கலை பற்றிய நேர்காணலில் அவர் கவிதையைப்பற்றிக்கூறியதை இங்கே பதிவு செய்கின்றேன். இது எம்பர்தோ எகோவின் கவிதையைப்பற்றிய கருத்து. என்னுடையதல்ல என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்திருங்கள்.

கவிதை பற்றிய கேள்வியொன்றுக்கு எம்பர்த்தோ எகோவின் பதில் இதுதான்: “சில குறிப்பிட்ட வயதுகளில் ஒரு பதினைந்து பதினாறு என்று வைத்துக்கொள்வோம். கவிதை என்பது சுயமைதுனம் செய்துகொள்வதைப்போன்றது என நினைக்கின்றேன். ஆனால் நல்ல கவிஞர்கள் தாங்கள் முன்னாளில் எழுதிய கவிதைகளைப் பின்னாட்களில் எரித்து விடுவார்கள். மோசமான கவிஞர்கள் அவற்றை வெளியிடுவார்கள். நான் அவற்றையெல்லாம் வெகு விரைவாகவே கை விட்டு விட்டேன் என்பது ஒரு வகையில் நன்றிக்குரியதே.”

Continue Reading →

வானம்பாடிகளும் ஞானியும் (2)….

- வெங்கட் சாமிநாதன் -இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள்,  வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , இன்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பற்றிய அவரது  சிந்தனைகள் எல்லாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், கடிதங்களை எல்லாம் தொகுத்து அளித்திருக்கிறார், படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வெளியில் சொல்லப்பட்டதும்,சொல்லிக்கொண்டதும்  தன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக நம் முன் அவை விரியும்போது, இவற்றினிடையே ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்களையும் மாறாது அவர் வலியுறுத்தும் பார்வைகளையும் பார்க்க முடிகிறது.

ஞானி தன் அளவுக்கு தனக்கு உண்மையாகத்தான் இருக்கிறார். அவ்வப்போது அவர் தன் சக கவிஞர்களைப் பற்றியும் அவ்வப்போது தன் மாறி வரும் அபிப்ராயங்களையும் சொல்லிச்  சொல்லும் போது , எல்லோரும் கூட்டாக செயல்படும்போது சில விஷயங்கள் மனதுக்கு ஒத்து வராவிட்டாலும் பாராட்டாது கூட்டுச் செயல்பாட்டிலேயே கவனம் செலுத்தும் காரணத்தாலா, இல்லை, பின்னர் எல்லாம் சரியாகிவிடும், மார்க்ஸிஸம் தான் இந்த முரண்களைச் சரி செய்துவிடும்  சர்வரோக நிவாரணி என்ற நம்பிக்கையா, எதுவென்று ஏதும் புரிவதில்லை. ஆனால் இந்த முரண்களை யெல்லாம் தானே முன் வந்து முன் வைக்கும்போது, அவரை நாம் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று கருத முடிவதில்லை. எனினும் ஒவ்வொரு கூட்டு இயக்கத்தின் பின்னும், கூட்டாக செயல்பட வருபவர்களின் அவரவரது உள்நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், பலவாக வேறுபடும் போது, அது அவருக்குத் தெரிந்த போதிலும் அதை மார்க்ஸிஸம் சரி செய்துவிடும் என்று அவர் நம்பினாலும் அந்த முரண்களும் தனி நபர் ஆசைகளும்  இல்லாமலாகி விடுவதில்லை. அவரவர் கவித்வ மகுடமும், ஒருமித்த செயல்பாட்டில் கிடைக்கும் பிராபல்யமும் இல்லாமலாக்கி விடுவதில்லை. அவரவர் தனியாகவும் சரி, கூட்டாகவும் சரி, தம் பிம்பத்தை வளர்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருப்பார்கள் போலும். போலும் என்ன?. அது தான்

Continue Reading →

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது | சக்தி விருது

அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த…

Continue Reading →

பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய  பாராட்டு விழா…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 119: தமிழினியின் ‘அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்…’

தமிழினி ஜெயக்குமாரன்அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.நிகழ்வுகளை விபரிக்கின்றது தமிழினி ஜெயக்குமாரனின் கவிதை. யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் கவிதை. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.

கவிதை

‘போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது’

என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் ‘காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / ‘யுத்தம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 116: செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’,செங்கை ஆழியானின் வாடைக்காற்றும் , பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரமும்!, & நகைச்சுவை எழுத்தாளர் த.இந்திரலிங்கம்:

செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’

செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாவல்களில் ஈழத்தில் வெளியான நகைச்சுவை நாவல்களுக்குமிடமுண்டு. அந்த வகையில் செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’ நாவல் முக்கியமானது. தன் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் புகையிரதத்தில் ஏறாத ஆச்சிக்கு அந்தச் சந்தர்ப்பம் அவரது முதிய பருவத்தில் ஏற்படுகிறது. கதிர்காமம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆச்சியின் கடைசி மகன் சிவராசனும், சிவராசனுக்காகக் காத்திருக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வியும் (இவள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்) செல்கின்றார்கள். ஆச்சியின் புகைவண்டிப் பயணமும், இளங்காதலர்களின் பொய்ச்சிணுங்கல்களும், மகிழ்ச்சியான தருணங்களும், நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழும், அவற்றுக்கு மேலும் துணையாக விளங்கும் ஓவியர் செளவின் ஓவியங்களும் வாசிப்பவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. இந்நாவல் முதலில் ‘விவேகி’ மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. தொடர் முடிவதற்குள் இதன் முதற் பதிப்பு (ஏப்ரில் 1969) யாழ் இலக்கிய வட்டத்தினரால் நூலாக வெளியிடப்பட்ட இந்நாவல் அதன் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது. அதன் பின்னர் நாவலின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1978) ஶ்ரீலங்கா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருப்பது நாவலின் மூன்றாவது பதிப்பு. செங்கை ஆழியானின் ‘கமலம் பதிப்பகத்தினரா’ல் மே 2001இல் வெளியிடப்பட்ட பதிப்பு. ஓவியர் ‘செள’வின் ஓவியங்களுடன் நேர்த்தியாக வெளியான பதிப்பு. நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் இதுவே இலங்கையில் வெளியான முதலாவது நகைச்சுவை நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவலென்று இதனைக் கூறுவேன். நூலாசிரியரின் ‘நடந்தாய் வாழி வழுக்கி ஆறு’வும் எனக்குப் பிடித்த ஆசிரியரின் இன்னுமொரு நகைச்சுவை விவரணச்சித்திரம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 115 : வண. சுவாமி ஞானப்பிரகாசர். கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் – 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )

வண. சுவாமி ஞானப்பிரகாசர்.மிகவும் அரியதொரு நேர்காணலை நண்பர்  துரைசிங்கம் குமரேசன் தனது முகநூல் பதிவாகப்பதிவு செய்துள்ளார்.  அமரர் அ.செ.மு அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசருடன் நடத்திய நேர்காணலை ‘வண சுவாமி  ஞானப்பிரகாசர் கண்டு கதைத்தது’ என்னும் தலைப்பில் ‘மறுமலர்ச்சி’ இதழில் (புரட்டாதி 1946) வெளியிட்டுள்ளதைத்தான் குமரேசன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியான ‘மறுமலர்ச்சி’ இதழ்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது அவசியம். அதனைத்தற்போது துரைசிங்கம் குமரேசன் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். இது போல் ஈழத்தில் வெளியான முக்கியமான இதழ்களின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். குறிப்பாக ‘விவேகி’, ‘கலைச்செல்வி’, ‘அலை’ போன்ற சஞ்சிகைகளின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். மேலும் ஓரிரு இதழ்களே வெளியான சஞ்சிகைகளை ஒன்று சேர்த்தும் வெளியிடலாம். உதாரணத்துக்கு ‘பாரதி’, ‘கவிஞன்’ போன்ற சில இதழ்களே வெளியான முக்கியமான சஞ்சிகளைகளைத்தான் குறிப்பிடுகின்றேன்.இவ்விதமான தொகுப்புகள் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக அறிவதற்கு மிகவும் உறுதுணையாகவிருக்கும். இல்லாவிட்டால் ஆளுக்காள் அவ்வப்போது தாம் நினைத்தபடி கூட்டி, குறைத்து, வெட்டி , ஒட்டி ஆய்வுக்கட்டுரைகளென்ற பெயரில் பூரணமற்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.

அசெமுவின் அந்த நேர்காணல் ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது.


வண. சுவாமி ஞானப்பிரகாசர்.

கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் – 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )

ஆறாம் வகுப்புப் படித்து விட்டு இலங்கை றெயில்வேயில் (Telegraph Signaller) உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீமான் வைத்திலிங்கம், பிறகு சுவாமி ஞானப்பிரகாசராகி எழுபது பாஷைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு புத்தக சாகரத்தின் நடுவே அமர்ந்து ‘தமிழ்தான் உலகத்துப் பாஷைகளில் எல்லாவற்றுக்கும் அடிப்படை’ என்று முழங்கவும், அதனை ஆராய்ச்சி பூர்வமாகக் காட்டவும் துணிவாரென்று யார் எதிர்பார்த்தார்கள்?

சுவாமிகளுக்குச் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இத்தாலி, பிறெஞ்ச், இங்கிலீஷ், தமிழ் உட்பட பன்னிரண்டு பாஷைகளைப் பிழையின்றி எழுத வாசிக்கத் தெரியும். லற்றின், பிறெஞ்ச், சிங்களம், ஆங்கிலம், தமிழ் – என்பனவற்றில் பேசவும் முடியும்.

Continue Reading →