தமிழ் உறவுகளுக்கு வணக்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 தமிழ்விழா ஜூலை 1 (வெள்ளி) முதல் ஜூலை 4 (திங்கள்) வரை நியூ ஜெர்சியில்,…
இன்னொரு யாழ்ப்பாண நூலக எரிப்பு நாள் வந்து கடந்து போயுள்ளது. அந்த ஒரு நாளில் நினைவு கூர்ந்துவிட்டுப் போவதால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் ஆவணங்களைக் காக்க முடியாது.
நண்பர்களே, நூலக நிறுவனத்தினராகிய நாம் (www.noolaham.org) ஆண்டு முழுவதும் ஆவணப்படுத்தலில் ஈடுபடுகிறோம். 5,000 நூல்கள், 7,000 சஞ்சிகைகள், 4,000 பத்திரிகைகள், 2,000 பிரசுரங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 18,000 ஆவணங்கள். முழுக்க முழுக்க ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இலட்சம் பக்கங்கள்.
2,700 ஆளுமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி தமிழின் மிகப்பெரும் வாழ்க்கை வரலாற்று அகராதியை உருவாக்கியுள்ளோம்.
அவை தவிர ஏட்டுச் சுவடிகள், நினைவு மலர்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், காணொளிகள் எனச் சகலவிதமான ஆவணங்களையும் திரட்டி ஆவணக்காப்பகமாகச் செயற்படத் தொடங்கியுள்ளோம்.
அன்புடையீர், உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் தொல்காப்பியம் பற்றிய கருத்தரங்கினையும் முத்தமிழ் விழாவினையும் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அழைப்பதில் பெருமகிழ்வு எய்துகின்றோம். இத்துடன் இருநாள் நிகழ்வுகளக்கான நிகழ்;ச்சித் தொகு;பபுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து வருகை தரும்வண்ணம் பணிவன்போடு கேட்டக்கொள்கின்றோம்.
த.சிவபாலு , தலைவர்
கார்த்திகா மகாதேவன், செயலாளர்
தமிழால் இணைவோம்! தமிழால் வளர்வோம்! தமிழை வளர்ப்போம்!
தகவல்: த.சிவபாலு avan.siva55@gmail.com
முகநூல்: கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!
– கம்பன் கழகம், பிரான்ஸ் –
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.
முதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.