ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவு

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுமுன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.

தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.

Continue Reading →

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்சுரேஷ் அகணிஅறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன். 

ஈழத்து இலக்கியவானில் ஓளிவீசிப் பிரகாசித்த அ.ந.க 1968ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி  இவ்வுலகைவிட்டுச் சென்றார். ஈழத்தில் சிறந்த சிறுகதை ஆசிரியராக நாவலாசிரியராக படைப்பாளியாக விளங்கினார். ஏழை பணக்கார பேதம் சாதி சமய வேறுபாடுகள் முதலாளி தொழிலாளிப் பிரச்சினைகள் போன்ற விடயங்களில் நடுநிலைக் கருத்தை மூலக் கருவாகக் கொண்டு அதிக யதார்த்த இலக்கியப் படைப்புக்களைச் செய்தார். இவரின் இலக்கியச் சாதனைகள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை நாடகம் மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் மிளிர்ந்தன. இவரின் பங்களிப்புக்கள் பத்திரிகைத் துறையையும் வானொலித் துறையையும் வலுவூட்டின. இவரின் அறிவூட்டல்கள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. இவரின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது “அ.ந.க ஒரு சகாப்தம்” என்ற நூலில் “ அ.ந.க வின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டுழ் படிக்கத் தூண்டும்” என்று கூறுகின்றார்.  அ.ந.க சிறுவயதில் தனது பெற்றாரை இழந்ததால் பாட்டியாருடன் வாழ்ந்திருக்கின்றார். இவர் பதினேழாவது வயதில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து தனிமையாக வாழ்ந்திருக்கின்றார். கண்டதைக் கற்றுப் புலமை தேடியவர். மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவரும் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்டவரே. அச்சகத் தொழிலாளருக்காகப் போராடினார். அச்சக முதலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். “சுதந்திரன்” போன்ற சில  பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். அரசாங்க தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். எமிலிஸோலாவின் “நானா” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் ஆய்வினை பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் எழுதினார். “மதமாற்றம்” என்ற நாடகத்தையும் “மனக்கண்” நாவலையும் எழுதியவர். இவர் ஆரம்ப காலத்தில் “கவீந்திரன்” என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். “எதிர்காலச் சித்தன் பாடல்”  “சத்திய தரிசனம்” “கடவுள் என் சோர நாயகன்” என்பவை இவர் எழுதிப் பாடிய பாக்களில் சில. “கசையடிக் கவிராயர்” என்ற புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளில் மலையகத் தொழிலாளரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய “நாயினும் கடையர்” “இரத்த உறவு” போன்ற படைப்புக்கள் முக்கியமானவை.

Continue Reading →

சிறுகதை: வட்டி!

அமரர் எஸ். அகஸ்தியர்எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை ‘வட்டி’ அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’

பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது?

‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்…நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும்  கேட்கிறதாக் காங்கலியே?  ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்…’

பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள்.

‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’

‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’

பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது.

‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’

Continue Reading →

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! -2

நித்தி கனகரத்தினம்நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ‘தமிழ் பாப் 70’ என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார்.  எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் ‘சின்ன மாமியே’ , ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே’ மற்றும் ‘ஊரே கெட்டுப் போச்சு’ ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்.  

இந்நிகழ்வு பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்நிகழ்வுக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் பதினைந்து ரூபா மட்டுமே. நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தினை தினபதி ஜெயசீலனும், ‘கீதா’ பத்திரிகை தமிழ் நெஞ்சனுமே பங்கு போட்டுக்கொண்டர்.

இந்நிகழ்வில் பின்னாலிருந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீட் அவர்கள் பின்னர் தானே முன்னின்று நித்தி கனகரத்தினத்தின்  இசை நிகழ்ச்சியினை நடத்திக்கொடுத்ததாகக் குறிப்பிட்டதாகவும் அது உண்மையில்லை என்பதைப்பதிவு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாப் 71, பாப் 72, பாப் 73 ஆகிய பாப் இசை நிகழ்ச்சிகளை எம்.எஸ்.பெர்ணாண்டோ ,மற்றும் இந்திராணி பெரேரா ஆகியோருடன் இணைந்து கொழும்பில் நடத்தியதையும் குறிப்பிட்டார். இறுதி நிகழ்ச்சி BMICH மண்டபத்தில் நடைபெற்றதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் முதலிரு நிகழ்வுகளும்
கொழும்பு நவரங்கல மண்டபத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

Continue Reading →