குட்டிச்சிறுகதை: : வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

1.
சிறுகதை வாசிப்போமா?பல்கலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும், உலகிற்கொரு முன்மாதிரியான மா நகரிந்தத் ‘தொராண்டோ’ மாநகர். பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள்,  விண்முட்டும் உயர் கட்டடங்கள், உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower), இயங்கும் தன்மை மிக்க ‘குவிகூரை’ விளையாட்டு மண்டபம் (SkyDome), மாபெரும் அங்காடிகள், பூங்காக்களென ஒளிருமிந்தப் பெருநகருக்கு உலகில் நல்லதொரு பெயருண்டு: இந்நகரொரு குட்டிப் பூகோளம்.

2.
இம்மாநகரில்தான் நானும் இத்தனை வருடங்களாகக் ‘குப்பை’ கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த நாட்டின் குடிமகனென்ற பெயரும், உரிமையும் கொண்ட எனைப் பார்த்து மூன்றாம் உலகத்து வாசிகளுக்குப் பொறாமையும், ஏக்கமும் அதிகம். அதிலும் தென்னிந்தியச் சினிமாக்களில் இந்நகரைக் காணும் தருணங்களிலெல்லாம் அவ்வுணர்வுகளதிகமாகும்.

3.
இந்தவிருபது வருடங்களில் தானெத்தனை எத்தனை மாற்றங்களை இம்மாநகர் கண்டுவிட்டது. இருந்தும் இன்னும் மாறாதவையுமுள சில.அவை:

3.1
அன்றெனை மறித்த காவல்துறையதிகாரி இன்று ஓய்வுபெற்றுப் போயிருக்கலாம். மரித்திருக்கலாம். இருந்தாலும் அன்றெனை மறித்த தருணத்தில் அவன் முகத்தில் படர்ந்த  அலட்சியம் ஒருவேளை அக்காலகட்டத்தின் எனது குடியுரிமை நிலை காரணமாக இருக்கலாமென்றெண்ணி ஆறுதலைடைந்ததுண்டு.

3.2.
ஆயின் பின்னர் குடியுரிமைபெற்றுப் பெருமிதத்தில் நடைபயின்றவென்னை இன்னுமொரு அதிகாரி அதுபோன்றதொரு அலட்சியத்தில் நடத்தியபோது, அவனுக்குமென் குடியுரிமை நிலை தெரியாமலிருந்திருக்கலாமென எண்ணினேன்.

Continue Reading →