ஆய்வு: பண்டைத் தமிழர் ஆடிப் பாடிக் களித்த துணங்கையும் குரவையும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

நம் பண்டைத் தமிழர்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மிக்க ஆர்வங்கொண்டு தாமனைவரும் ஆடிப் பாடிக் களிப்புற்றிருக்கக் கூத்துக்களை அமைத்துக் கூத்தும் ஆடிக் குலாவி மகிழ்ந்திருந்தனர். அன்று துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் அவர்கள் மத்தியில் நிலவியிருந்தன. இவற்றில் துணங்கைக் கூத்து முன்னிலையில் சிறப்புற்றிருந்தது. துணங்கைக் கூத்து:-  மகளிர் பலர் ஒன்று சேர்ந்து இரு கைகளையும் மடக்கி விலாவிடத்து அடித்துக் கொண்டு ஆடுவர். இவர்களுக்குத் தலைக்கை கொடுத்துத் தொடங்கி வைப்பர் ஆடவர்.  இதனைப் பேய்க் கூத்தென்றும், சிங்கிக் கூத்தென்றும் கூறுவர். ‘நிணந்தின் வாயள் துணங்கை தூங்க.’ (திருமுருகு. 56) என்னும் அடிக்கு ‘பழுப்புடையிருகை முடக்கியடிக்க, துடக்கிய நடையது துணங்கையாகும்’ என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுதான் துணங்கையின் இலக்கணமாகும்.  குரவைக் கூத்து:-  துன்பம் வந்தவிடத்தும், இன்பம் பெருகிய பொழுதும், பக்தி மேலிட்டாலும் ஆயர்கள், வேடர்கள், குறவர்கள் முதலானோர் குரவைக் கூத்தாடுவது வழக்கம். மகளிர் பலர் சேர்ந்து கைகோத்து ஆடும் கூத்தைக் குரவைக் கூத்தென்பர். புதுமலர் மாலை சூடிய ஆடவர் வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தைத் தொடக்கி வைப்பர்.

இனி, தமிழ் இலக்கியங்களில் துணங்கை, குரவை ஆகிய இருவகைக் கூத்துக்களும் எவ்வாறு பேசப்படுகின்றன என்பது பற்றி ஆராய்வாம். புறநானூறு கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு எனும் நூலில், வெம்மையான மதுவை விரும்பி உண்ட ஆடவர் புன்னைமரப் புதுமாலை அணிந்து, வளையல் அணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தும் ஆடுவர் என இப்பாடலை யாத்த மாங்குடி மருதனார் (இவரை மதுரைக் காஞ்சிப் புலவர் எனவும், மாங்குடி கிழார் எனவும் உரைப்பர்) என்ற புலவர் கூறியுள்ளார்.

‘வெப் புடைய மட் டுண்டு,
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;’ – (பாடல்  24-5-9)  

Continue Reading →

ஆய்வு: இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.இந்நுல்களை அற நூல்கள், நீதி நூல்கள் எனவும் குறிப்பிடலாம்.இக்காலக் கட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்தனர் அதனால் இக்காலம் இருண்டக் காலம் என வழங்கப்படுகிறது.இதற்கு இருண்ட கால இலக்கியங்கள் என்ற பெயரும் உண்டு.இந்நூல்கள் அறம்,அகம்,புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அற நூல் பதினொன்று,புற நூல் ஒன்று,அக நூல் ஆறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இன்னா நாற்பது விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 41 பாடல்கள் இயற்றியுள்ளார்.சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இச்செயல்களை செய்தால் துன்பம் தரும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.இதில் 164 இன்னாச் செயல்கள் உள்ளன.இந்நூலில் இடம் பெறும் சமுதாய நெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
மதுரை தமிழ் அகராதி சமுதாயம் என்பதற்கு கூட்டம்,சங்கம்,பின்னணி,ஊர்ப் பொது,மக்களின்திரள்,பொருளின்திரள்,பொதுவானது,பொதுவாகவேனும்,அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து,சபை,அவைக்களம்  என்று பொருள் விளக்கம் அளிக்கிறது.மேலும் செந்தமிழ் அகராதி மக்களின் திரள்,பொதுவானது எனப் பொருள் உரைக்கிறது.பேராசிரியர் காளிமுத்து அவர்கள் வளர்தமிழில் அறிவியல் அறிவியலும் சமுதாயம் என்ற நூலில் சமுதாயம் என்பது உறவுடன் கூடிய மக்களின் வாழ்க்கைத்தளம் என்றும் உலகில் தோன்றிய இனங்களில் ஒன்று மனித இனம் இவ்வினம் ஆறாவது அறிவைப் பெற்று தனக்காக சிலவற்றைத் தேடி அவற்றுடன் சார்ந்து வாழும் நிலையே சமுதாயம் என்று குறிப்பிடுகிறார்.

கல்வி
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’என்பதாகும்.கல்லுதல் என்றால் தோண்டுதல் மனத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்ப வல்லது கல்வி. இக்கல்வியின் பயனாக ஒருவன் இயைந்த முழுவளர்ச்சியினையும் பெறுகிறான் இன்னாநாற்பதில் கல்விப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

Continue Reading →