நாவல்: ஏழாவது சொர்க்கம் – மைக்கல்

நாவல்: ஏழாவது சொர்க்கம் – மைக்கல்

- மைக்கல் -நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல் – எழுத்தாளரும், விமர்சகருமான மைக்கல் எழுதிய ‘ஏழாவது சொர்க்கம்’ நாவ்ல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கியது. ‘பதிவுகள் இணைய இதழில் ஆகஸ்ட் 2001 (இதழ் 10) தொடக்கம்  ஏப்ரல் 2002 ( இதழ் 28 ) வரை தொடராக வெளிவந்தது. கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த, சேர்க்கின்ற படைப்பாளிகளில் மைக்கலும் ஒருவர். இந்நாவல் ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


[ மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன.  ஒரு நல்லதொரு விமர்சகராக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத் தக்கவர். இவரது ‘ஏழாவது சொர்க்கம்’ என்னும் இந் நாவலைப் ‘பதிவுகளி’ல் பிரசுரிப்பதற்காக அனுப்பியதற்காக எமது நன்றிகள்…ஆசிரியர்]

-இதை எழுதும்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துக் கருத்துச் சொன்ன என் பிரியமான தேவிக்கும் அவளது கர்ப்பத்தில் இருக்கும் யுகபாரதிக்கும் (கருவிலே நீ கேட்டுக்கொண்டு இருந்திருந்தால் பத்மவியூகத்தை உடைப்பாய்..!) இக்குறுநாவலை சமர்ப்பணம் செய்கிறேன்.– மைக்கல் –


பதிவுகள் ஆகஸ்ட் 2001   இதழ்-20

1

சிறுநகரத்திலிருந்து விலகி மேற்காக இருபதுகிலோமீட்டர்கள் ஆளரவமற்ற சோளவயல்களைக் கடந்து முன்னேற பூமியைப் புடைத்துக் கிளம்பிய வெண்வண்ணக் கொப்புளம் போல விஸ்தீரணம் பரப்பித் தெரிகிறது ஜோயஸ்வில் சிறைச்சாலை.

அரை நிலவின் ஒளி வெண்பனியில் மோதித் தெறித்து வெளுத்துக் கிடக்கிறது இரவு.

சிறைச்சாலைக்கு வெளியே –

கட்டடத்தைச் சுற்றி எழுப்பிய உயரமான கம்பிவேலி. அதன் நான்கு மூலைகளிலிலும் காவற்கோபுரங்கள். இடைக்கிடை காவற்கோபுரத்திலிருந்து உயிர்த்து பனிக்கால இரவை ஊடறுக்கிறது கண்காணிப்பு ஒளிவீச்சு.

சிறைச்சாலைக்கு உள்ளே –

விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணு¡று கைதிகள். கடமையில் இருக்கும் அவர்களது மேய்ப்பர்கள். கைதிகளை இயக்கும் சூத்திரக்கயிறாக சில சட்டங்கள்.

Continue Reading →