நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல்

எழுத்தாளர் க.நவம்‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’

துரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

Continue Reading →

எழுத்தாளர், அச்சு, இலத்திரனியல் ஊடக ஆசிரியர் மாலன் உடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

தொடக்க உரை – ராஜேஸ் பாலாவழிப்படுத்தல் எம் .பௌசர்காலம் 03 செப்டம்பர் 2016சனி மாலை 5.30 தொடக்கம் 8.30 வரை அவரது நூல் அறிமுகமும், புலம் பெயர்…

Continue Reading →

ஆய்வு: விஜயம் நாவலில் பொருளாதார மேம்பாடு

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
பொருளாதார மேம்பாடு என்பது வறுமை நிலையில் உள்ள மக்களை முன்னேற செய்யும் வழிமுறைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொழிலாளி, முதலாளி எனும் வர்க்க வேறுபாடு வலுப்பெற்று வந்தது. அதன் அடிப்படையில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி உழைப்பிற்கேற்ற ஊதியமும், கூலியும் கொடுக்க மறுக்கின்ற சமூகநிலை உருவாயிற்று. இவை தொடர்பான பதிவுகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எடுத்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம் பகுத்தறிவுச் சிந்தனையின்றிச் செயல்படும் தன்மையினை விஜயம் நாவல், தீமையைப் பழிப்பதற்கும், நன்மையைப் புகழுவதற்கும் ஓர் எல்லை உண்டு. நல்ல கொள்கை என்றாலும் அதைக் தவறான பாதையில், பகுத்தறிவின்றி உபயோகப்படுத்தத் துணிந்தால், அதனால் கேடுதான் விளையும். சோம்பி வாழ்பவன் சுகவாசி ஆவானா? உழைப்பது கவுரவக் குறைவு என்று நினைத்து, சுகவாசி வாழ்வை நாடிய நம் நாட்டார் எல்லாத் தொழில்களையும் பறிகொடுத்துவிட்டு, சாப்பாட்டுக்குப் போதுமான தானியங்களைப் பயிராக்க முடியாத இங்கிலீஷ்காரரின் தேசத்தைக் கைத்தூக்கி விட்டுவிட்டார்கள்.1 இவ்வாறான செய்தியினை எடுத்துரைக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யும் நிலையினைப் பற்றி விஜயம் நாவல், வாழ்க்கையைத் துண்டு துண்டாக நோக்குவது கூடாது. வாழ்வை ஒன்று சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் பல பகுதிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு கிடக்கையில், ஒன்றிரண்டு பகுதிகளைமட்டும் மாற்றிக்கொள்ளுவது முடியாத காரியம். ஏனைய பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் போய்ப் பாதிக்கும். சிறிய புதுப் பழக்கமான காபியை எடுத்துக் கொள்ளுவோம். பழையது சாப்பிடப் பணம் வேண்டாம். காபிக்கு அதிகமான பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். மேலும், ஒருவர் வீட்டில் காபி சாப்பிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும், காலக்கிரமத்தால் காபிக் குடியர்கள் ஆகிறார்கள். எல்லோருக்கும் நவ நாகரிக ஆசை தோன்றுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தின் போக்கே, விரைவில் மாற்றம் அடைகிறது. கல்யாணம் என்பது மதச் சடங்காக இருந்ததுபோக, அது இப்பொழுது வியாபாரத் தொழிலாக ஆகிவிட்டது‚ இந்த நிலைமையை, நம் முன்னோர் பொறுப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? 2 என்று எடுத்துரைக்கின்றது. பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் என்னவோ அதன்படி நடந்து கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பெரியார் வருமானத்திற்கு மீறிய செலவினைப் பற்றி, தேவைக்கு மட்டுமே செலவு செய்வது சிக்கனம். தேவை மேல் செலவு செய்வது ஊதாரித்தனம். தேவைக்கே செலவு செய்யாமலிருப்பது கருமித்தனம்.3 என்று சிக்கனம், ஊதாரித்தனம், கருமித்தனம் போன்றவற்றிற்குத் தெளிவாகப் விளக்கம் அளித்துள்ளார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் ஓர் உரையாடல்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக…

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவு

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுமுன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.

தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.

Continue Reading →

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்சுரேஷ் அகணிஅறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன். 

ஈழத்து இலக்கியவானில் ஓளிவீசிப் பிரகாசித்த அ.ந.க 1968ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி  இவ்வுலகைவிட்டுச் சென்றார். ஈழத்தில் சிறந்த சிறுகதை ஆசிரியராக நாவலாசிரியராக படைப்பாளியாக விளங்கினார். ஏழை பணக்கார பேதம் சாதி சமய வேறுபாடுகள் முதலாளி தொழிலாளிப் பிரச்சினைகள் போன்ற விடயங்களில் நடுநிலைக் கருத்தை மூலக் கருவாகக் கொண்டு அதிக யதார்த்த இலக்கியப் படைப்புக்களைச் செய்தார். இவரின் இலக்கியச் சாதனைகள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை நாடகம் மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் மிளிர்ந்தன. இவரின் பங்களிப்புக்கள் பத்திரிகைத் துறையையும் வானொலித் துறையையும் வலுவூட்டின. இவரின் அறிவூட்டல்கள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. இவரின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது “அ.ந.க ஒரு சகாப்தம்” என்ற நூலில் “ அ.ந.க வின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டுழ் படிக்கத் தூண்டும்” என்று கூறுகின்றார்.  அ.ந.க சிறுவயதில் தனது பெற்றாரை இழந்ததால் பாட்டியாருடன் வாழ்ந்திருக்கின்றார். இவர் பதினேழாவது வயதில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து தனிமையாக வாழ்ந்திருக்கின்றார். கண்டதைக் கற்றுப் புலமை தேடியவர். மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவரும் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்டவரே. அச்சகத் தொழிலாளருக்காகப் போராடினார். அச்சக முதலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். “சுதந்திரன்” போன்ற சில  பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். அரசாங்க தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். எமிலிஸோலாவின் “நானா” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் ஆய்வினை பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் எழுதினார். “மதமாற்றம்” என்ற நாடகத்தையும் “மனக்கண்” நாவலையும் எழுதியவர். இவர் ஆரம்ப காலத்தில் “கவீந்திரன்” என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். “எதிர்காலச் சித்தன் பாடல்”  “சத்திய தரிசனம்” “கடவுள் என் சோர நாயகன்” என்பவை இவர் எழுதிப் பாடிய பாக்களில் சில. “கசையடிக் கவிராயர்” என்ற புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளில் மலையகத் தொழிலாளரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய “நாயினும் கடையர்” “இரத்த உறவு” போன்ற படைப்புக்கள் முக்கியமானவை.

Continue Reading →

சிறுகதை: வட்டி!

அமரர் எஸ். அகஸ்தியர்எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை ‘வட்டி’ அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –


‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’

பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது?

‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்…நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும்  கேட்கிறதாக் காங்கலியே?  ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்…’

பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள்.

‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’

‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’

பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது.

‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’

Continue Reading →

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! -2

நித்தி கனகரத்தினம்நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ‘தமிழ் பாப் 70’ என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார்.  எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் ‘சின்ன மாமியே’ , ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே’ மற்றும் ‘ஊரே கெட்டுப் போச்சு’ ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்.  

இந்நிகழ்வு பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்நிகழ்வுக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் பதினைந்து ரூபா மட்டுமே. நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தினை தினபதி ஜெயசீலனும், ‘கீதா’ பத்திரிகை தமிழ் நெஞ்சனுமே பங்கு போட்டுக்கொண்டர்.

இந்நிகழ்வில் பின்னாலிருந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீட் அவர்கள் பின்னர் தானே முன்னின்று நித்தி கனகரத்தினத்தின்  இசை நிகழ்ச்சியினை நடத்திக்கொடுத்ததாகக் குறிப்பிட்டதாகவும் அது உண்மையில்லை என்பதைப்பதிவு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாப் 71, பாப் 72, பாப் 73 ஆகிய பாப் இசை நிகழ்ச்சிகளை எம்.எஸ்.பெர்ணாண்டோ ,மற்றும் இந்திராணி பெரேரா ஆகியோருடன் இணைந்து கொழும்பில் நடத்தியதையும் குறிப்பிட்டார். இறுதி நிகழ்ச்சி BMICH மண்டபத்தில் நடைபெற்றதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் முதலிரு நிகழ்வுகளும்
கொழும்பு நவரங்கல மண்டபத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

Continue Reading →