வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் ‘சேர்ப்பிறைஸ் விசிட்’

வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' கே.எஸ்.சுதாகர்புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். ‘சேர்ப்பிறைஸ் விசிட்’ என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் ‘சேர்ப்பிறைஸ் விசிட்’ அடிக்கின்றனர் 🙂

“கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு” என்று ‘சும்மா’வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , “அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது” காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

“நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு” உதட்டுக்குள் சிரித்தாள் பவானி.”

இவ்விதம் கதை செல்கின்றது. ‘உதட்டுக்குள்’ சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

அதன்பிறகு கதை இவ்வாறு தொடர்கின்றது.

“அதன்பிறகு கோபம் நீக்கி சம்பிரதாயமான உரையாடல் சுகம் விசாரிப்பு, தேநீர் விருந்துபசாரம் மேற்கொண்டு நேரம் நகராத வேளையில் சுலோசனா இராசலிங்கத்தைப் பார்த்து கண்ணை வெட்டினாள். இராசலிங்கம் உதட்டுக்குள் சிரிப்பொன்றைத் தவழ விட்டார். ஏதோவொன்றை முடிச்சவிழ்க்கும் முஸ்தீபில் செருமினார்.

‘உங்களுக்கொடு சேர்ப்பிறைஸ் விஷயமொண்டு சொல்ல வேணும். மவுன்ற் டண்டினோங்கிலை நாங்கள் ஒரு புது வீடொன்று கட்டி இருக்கிறம். ‘ சுப்பர் மார்க்கெட்டில் அரிசி, சீனி வாங்கியது போலச் சொன்னார் இராசலிங்கம்.’

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 261: எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும்

ஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் வெளியான என்னுடனான நேர்காணல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும் ஒரு பதிவுக்காக. முருகபூபதி: “அன்புள்ள…

Continue Reading →