“என்ன வேண்டுமானாலும் செய்வாள்.”

சுஜா வருணி

”வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்”

தத்தமது மனதின் எண்ணிறந்த வன்புணர்வுகள்
படுகொலைகளையெல்லாம்
வசதியாய் புறமொதுக்கிவிட்டு
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான தனிப்பொருளை
சொற்களிடையே தூவிவைத்துக்
கண்ணால் கூடுதல் குறிப்புணர்த்தி
யுரைக்கிறார்கள்.
BIGG BOSS போட்டியில் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் இருவர்.
(தியாகசீலர்களோ, தீர்க்கதரிசிகளோ அல்லர்.)

“வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்.”

Continue Reading →

டொராண்டோவில் நிகழ்ந்த நிருத்திய நாட்டியம்! கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் ‘பகவத் கீதை’!

சாண் சந்திரசேகர்கலாநிதி பத்மா சுப்ரமணியம் கனடாவிலுள்ள ‘ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்’ (ATN) ஸ்தாபன உரிமையாளர் அவர்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இவர் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் உடன் பிறந்த சகோதரர். புகபெற்ற இயக்குநர் கே.சுப்ராமணியத்தின் புத்திரர். கனடாவில் தெற்காசியர்களுக்கான தொலைக்காட்சி சேவைகளை இவரும் இவரது மனைவி ஜெயா சந்திரசேகரும் பல வருடங்களாக நடத்தி வருபவர்கள். கனடியார்கள் மத்தியிலும் வர்த்தக மற்றும் அரசியல்  வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவர். இவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதையும், அதன் காரணமாகவே கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின்  நடனத்தைக் கண்டு களிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டதையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது.

2001இல் ஒரு நாள், ‘பதிவுகள்’ இணைய இதழ் தத்தித் தவழ்ந்து நடை போட முயன்று கொண்டிருந்த சமயம். அப்பொழுது ‘பதிவுகள்’ இணைய இதழை அறிமுகப்படுத்தும்பொருட்டு ‘டொரோன்டோ’விலுள்ள ஊடகங்களுக்கு அறிமுக மின்னஞ்சலொன்றினை அனுப்பியிருந்தேன். அவ்விதம் அனுப்பிய ஊடக நிறுவனங்களில் ‘ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்’ நிறுவனமும் ஒன்று. அதன் பின் அதனை அப்படியே மறந்தும் விட்டேன். ஆனால் திடீரென எனக்கு மின்னஞ்சலொன்று வந்திருந்தது. அது ‘ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்’ உரிமையாளரான சாண் சந்திரசேகரிடமிருந்து. அதில் அவர் என்னைத் தன் நிலையத்துக்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பினையேற்று நியுமார்க்கட் பகுதியில் அமைந்திருந்த ‘ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்’ நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அவர் வரவேற்று உபசரித்து தொலைக்காட்சி நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். அத்துடன் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு வாழ்த்துக் கூறியவர், அக்காலகட்டத்தில் ‘டொராண்டோ’வில் நடக்கவிருந்த அவரது சகோதரியான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நாட்டிய நிகழ்வுக்கான ‘விஐபி’ அழைப்பிதழினையும் வழங்கியிருந்தார். அதன் மூலம் எனக்கும் உலகப்புகழ்பெற்ற நாட்டியத்தாரகையான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நடனத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்நிகழ்வுக்கு நானும் என் மூத்த புதல்வி தமயந்தியும் சென்றிருந்தோம். மறக்க முடியாத நிகழ்வு. பின்னர் அந்நிகழ்வு பற்றிப் ‘பதிவுகள்’ இணைய இதழில் கட்டுரையொன்றும் எழுதியிருந்தேன். அக்கட்டுரையே இங்குள்ள கட்டுரை.

கலாநிதி பத்மா சுப்ரமணியத்தை நினைக்கும்போதெல்லாம் ஞாபகத்துக்கு வருமொரு விடயம்: ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆரின் கனவுகளிலொன்று கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்க வேண்டுமென்பது. அதில் தான் வந்தியத்தேவனாகவும், பத்மா சுப்ரமணியம் குந்தவையாகவும் நடிக்க வேண்டுமென்பது. ஆனால் எம்ஜீஆர் பலமுறை முயற்சி செய்தும் பத்மா சுப்ரணியம் தனக்கு நடிப்பதில் ஆசை இல்லையென்று மறுத்து விட்டதால் எம்ஜிஆரின் கனவும் கனவாகவே போய்விட்டது. இதனை பத்மா சுப்ரமணியமே பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கின்றார். –


Continue Reading →

தமிழர்தம் வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம்!

– யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா, ஆஸ்திரேலியாவின் ‘கானமழை 2017’ சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது. –

கானமழை 2017‘ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் தவறென்ன’ என்று ஆக்ரோசமிடுவதுடன் திருப்தியுறும் தமிழர்களிடமுள்ள முக்கியமான குறைபாடுகளிலொன்றாக நான் கருதுவது தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் , பேணுவதில் காணப்படும் ஆர்வமின்மை ஆகும். மாறிவரும் காலத்தின் ஓட்டங்களுக்கேற்ப மாறிவரும் சமுதாயச்சூழலில் இனமொன்றின் தனித்துவத்தையோ அல்லது அதன் பண்பாட்டின் வளர்ச்சியையோ பேணுவது அவசியமாகும்.  அவ்வாறு செய்யாவிடின் அக்காலத்தின் வளர்ச்சியும், காலத்தின் கோலத்திற்கேற்ப கட்டெறும்பாகத் தேய்ந்து மறைந்துவிடும்.  மேலும் ஓரினத்தின் வரலாறு தெளிவின்றியிருக்குமாயின் அதன் வரலாற்றிலொரு தெளிவினை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். ஈழத் தமிழினத்தைப்பொறுத்தவரையில் அதன் வரலாற்றிலோ தெளிவற்ற ஒரு குழப்ப நிலை நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  வரலாற்றினை நிரூபிப்பதற்குரிய சான்றுகளோ கவனிப்பாரற்ற நிலையில் புறக்கணிக்கப்பட்டுக்கிடக்கின்றன.  ஒரு வெளிநாட்டவரோ அல்லது நம்மவர் ஒருவரோ பார்க்க விரும்பினால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளென்று அழைத்துச்சென்று காட்டக்கூடிய  பகுதிகள் எத்தனையுள்ளன? இருக்கும் பகுதிகள் கூட கவனிப்பாரற்ற நிலையில், அவை பற்றிய போதிய தகவல்களற்ற நிலையில்தாமே இருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில்தான் பழமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் அதிகமாகின்றது.  வரலாற்றுரீதியான ஆய்வுகளுக்கு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழமையின் சின்னங்களும், சிதைந்த நிலையில் காணப்படும் அழிபாடுகளும் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாததொன்றாகின்றது.

உதாரணத்துக்கு நல்லூர் நகரை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஈழத்தமிழர்களின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இராசதானியாக, அமோகமான புகழுடன் விளங்கிய நகர் நல்லூர்.  இன்றைய நிலை என்ன? காலத்தின் கோலத்துக்கேற்ப விரைவாக மாறுதலடைந்துள்ள நிலையில் உண்மையில் அந்நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளெல்லாம் முறையாகப் பேணப்படாத நிலையில், காலவெள்ளத்தில் அடியுண்டு போகும் நிலையில்தானுள்ளன. இதுவரையில் இவ்விதம் இராஜதானியாக விளங்கிய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஒரேயொரு ஆய்வு நூல்தான் வெளியாகியுள்ளது. அது தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம், மங்கை பதிப்பகம் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ என்னும் நூல்தான். 1996இல் வெளியானது.

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி ஆராய முற்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாம் எம் வரலாறு பற்றிய போதிய ஆய்வுகளற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர முடிந்தது. உண்மையில் நல்லூர் இராஜதானியாக விளங்கிய காரணத்தால், இப்பகுதியில் காணப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த பகுதிகள் பற்றி (குளங்கள் உட்பட) , காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள், அவற்றின் சிதைவுகள் பற்றி, அவற்றின் வரலாறு பற்றியெல்லாம் விரிவாக , ஆராயப்பட்டு, அவை நூல்களாகப் போதிய அளவில்  வெளிவந்திருக்க வேண்டும். அவ்விதம்  வெளிவரவில்லை. நல்லூர் நகரானது எவ்விதம் பெளத்தர்களுக்கு அநுராதபுரம் போன்ற தென்னிலங்கை இராஜதானி நகர்களெல்லாம் புனித நகர்களாகக் கருதப்பட்டு, அங்கு காணப்படும் பழமையின் சின்னங்கள் பேணப்படுகின்றனவோ அவ்விதமே கருதப்பட்டு முறையாகப் பேணப்பட்டிருக்க வேண்டும்.  ஈழத்தமிழர்களின் வட, கிழக்குப் பகுதிகளிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்களெல்லாம் , பேணப்பட வேண்டிய நகர்களாகக் கருதப்பட்டு, அந்நகர்களின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்றுக்குறிப்புகள் எல்லாம் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பேணப்பட்டு, இவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும், ஆள்வோர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

Continue Reading →